தீண்டும் இன்பம்
Original price was: ₹175.00.₹166.00Current price is: ₹166.00.
Description
‘தீண்டும் இன்பம்”என்னும் இந்த நாவல் தொடர் கதையாக ஆனந்தவிகடன் பத்திரிகையில் வந்தது. என் தொடர் கதைகளில் பல விகடனில் சிறப்பாக வெளிவந்திருக் கின்றன. முதன்முதல் வந்தது ‘ஜன்னல் மலர்’ என்று ஞாபகம். இது ஒரு குறு நாவல் இதன் முடிவில் அப்போது விகடனில் ஆசிரியக்குழுவில் இருந்த பரணீதரன் ஸ்ரீதர் அவர்கள் ஒரு சிறிய திருத்தம் செய்து கதையின் மதிப்பை அதிகரித்தார். அடுத்து ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ வெளி வந்தது. மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றது. அதை சினிமா எடுக்க பலபேர் முயன்று குட்டிச் சுவராக்கினார். இன்றும் செண்பகப்பூ வாசனை குறையாமல் இருப்பதற்கு காரணம் அதில் விரவியிருக்கும் நாட்டுப்புறப் பாடல்கள்தாம்.
அடுத்து ‘கனவுத் தொழிற்சாலை’. இதற்கு விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் சினிமா பானர் போல மவுண்ட் ரோடில் வைத்தார். இந்தியாவிலேயே எழுத்தாளனுக்கு பானர் வைத்தது முதன்முறை என்று எண்ணுகிறேன். அதன்பின் விகடனில் தொடர்ந்து என் பல கதைகள் வெளியாயின. ‘என் இனிய இயந்திரா இரண்டு பாகங்கள். ‘பிரிவோம் சந்திப்போம்’ இரண்டு பாகங்கள். நிறமற்ற வானவில்’ ”ஆ!” பிரிவோம் சந்திப்போம் முதல் பாகத்தை அமெரிக்கா செல்லும் கதாநாயக நாயகியருடன் முடித்திருந்ததால் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னை அமெரிக்கா போய் பார்த்துவிட்டு இரண்டாம் பாகத்தை எழுதுமாறு சொன்னார் அதற்கான டிக்கெட்டும் வாங்கிக் கொடுத்தார்
பாலசுப்பிரமணியன் அவர்கள் போல ஒரு தாராள மனசுள்ள பத்திரிகையாசிரியரை நான் இதுவரை வாழ்நாளில் கண்டதில்லை. அவருடன் என் நட்புக்கு இருபத்தைந்து வயதாகிறது.
அவருக்கு இந்தப் புத்தகத்தை அர்ப்பணிப்பதில் பெருமை கொள்கிறேன். இன்டெர் நெட் காலத்திலும் என் புத்தகங்களை தொடர்ந்து வெளியிடும் திருமகள் நிலையத் தாருக்கு நன்றி!
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.2 × 12 × 18 cm |
| Author | சுஜாதா |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 256 |
| Format | paperback |
| ISBN |




Reviews
There are no reviews yet.