கொலை அரங்கம்
Original price was: ₹110.00.₹104.00Current price is: ₹104.00.
Description
“கணேஷ் – வஸந்த் வரும் புத்தகங்கள் எல்லாம் எனக்குத் தேவை” என்று பல வாசகர்கள் கடிதம் எழுதி வருகிறார்கள். இந்த கணேஷ் – வஸந்திடம் வாசகர்கள் இவ்வளவு ஈடுபாடுகொள்ளக் காரணம் என்ன என்று நான் சிந்தித்ததுண்டு. சுஜாதா இந்த இருவர்களின் மூலம் பல உண்மையின் தேடல்களை, அதாவது துப்பறிதலை ஆராய்ந்திருக்கிறார். கணே ஷின் அறிவுக் கூர்மையும் வஸந்தின் குறும்புத்தனமும் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்து விடுகிறது.
இந்த நாவலில் இருவரையும் மிகவும் கஷ்டப் படுத்தி இருக்கிறார் சுஜாதா. இது குண்டுகள் வெடிக் கும் காலம். சென்னை விமான நிலையத்தில் வெடித்த குண்டு பல உயிரை மாய்த்தது. இலங்கை யிலிருந்து வாழ்விழந்த பல தமிழர்கள் புகலிடம் தேடி தமி ழகம் வருகின்றனர். இதற்கெல்லாம் கணேஷ் – வஸந்த் மூலம் இந்தக் கொலை அரங்கத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறார் சுஜாதா. நம் வாழ்வுடன் ஒட்டி உறவாடும் வஸந்த் – கணேஷை நாம் எப்படி மறக்க முடியும்?
கொலை அரங்கம் 1984ல் வெளியான போது ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகள் எழுப்பிய காலம். அந்தப் போராட் டத்தை அரசியல்வாதிகள் பலர் பலவிதத்தில், தத்தம் சுயநலங்களுக்காக பொய்யான அனுதாபங் களைக் காட்டி, தம்மேல் வெளிச்சம் பெறுவதற் காகப் பயன்படுத்தினார்கள். இது என் மனதில் ஒரு கற்பனைக் கதையாக உருவாகி திரில்லர் வடிவத் துக்கு மாறியது. அதுவே ‘கொலை அரங்கம்’. கணேஷ் – வசந்த், நாவலின் முதல் அத்தியாயத்தி லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல் களில் ஒன்று இது. ‘குங்குமம்’ வார இதழில் இந்தக் கதை வெளிவந்தது. நாகப்பட்டினத்தில் குமரிப் பதிப்பகம் இதை புத்தகமாக வெளி யிட்டார்கள். அந்த நாட்களில் பரபரப்பான புத்தக விற்பனைக்கான புத்தகச் சந்தைகளும் இல்லை. ‘கொலை அரங்கம்’ மறு பதிப்பாக இருபத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது. இதைச் சிறப்பாக வெளியிடும் விசா பப்ளிகேஷன்ஸிற்க்கு நன்றி.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.5 cm |
| Author | சுஜாதா |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 112 |
| Format | paperback |
| ISBN | 9789348027375 |



Reviews
There are no reviews yet.