மூன்று நிமிஷம் கணேஷ்!
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
ஹைகோர்ட்டு விடுமுறையிலிருந்தது. வெக்கேஷன் ஜட்ஜ், எதிராஜுவின் கேஸை எடுத்துக் கொள்ளப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். சென்னையில் வெயில் பற்றி வாரப் பத்திரிகை கள் ஜோக் போட்டு அலுத்துவிட்டன. கணேஷும் வஸந்த்தும் பங்களூருக்குச் சின்னதாக ஒரு டிரிப் அடித்துவிட்டு வரலாம் என்று காலை பிருந்தாவனில் ரெயிலேறினார்கள். பங்களூரிலும் அப்படி ஒன்றும் குளிர்ச்சி இல்லை. இருந்தாலும் வஸந்த்துக்கு ஒரு நைப்பாசை. சமீபத்தில் சந்தித்து நிமிஷத்தில் காதலித்த ஒரு கன்னிகை அவனிடம் பங்களூர் விலாசம் தந்திருந்தாள். ஒரு நடை போய் விசாரித்துவிட்டு வரலாமே என்று தான்.
கணேஷுக்கு ‘வார் அண்ட் பீஸ்’ படித்து முடித்து விடலாம் என்று ஆசை. எனவே பிருந்தாவன் முதல் வகுப்பு சாய்மானத்தில் உட்கார்ந்து கொண்டிருக்க ரயில் புறப்பட்டபோது இருவரும் உற்சாகமாகத்தான் இருந்தார்கள். வஸந்த்துக்கு இடப்பக்கம் ஒரு யுவதி ‘படுஜிகா’வாக வஸந்த்தின் பிரயோகம்-டிரஸ் பண்ணிக் கொண்டு சமர்த்தாக, அழகாக உட்கார்ந்திருந்தாள்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 136 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.