மீண்டும் தூண்டில் கதைகள்
Original price was: ₹85.00.₹81.00Current price is: ₹81.00.
Description
நான் பெங்களூரில் இருந்தபோது 1989-லேயே தமிழ்ப் பத்திரிகை களில் சிறுகதைகளின் ஆதிக்கம் குறைவதை உணர்ந்து, ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களுக்கு, ‘சற்று நீண்ட கதை எழுதலாமா?’ என்று கேட்டேன். அவர், ‘தாராளமாக அனுப்புங்கள்; பிரசுரிக்கிறோம்’ என்றார். ‘அந்தக் கதைகளில் பொதுவாக, முடிவில் ஒரு சொடுக்குத் திருப்பம் இருக்கும்’ என்றேன்.
குறுந்தொகை 54-ஆம் பாடலில் இரண்டு வரிகள் உண்டு. மீன்எறி தூண்டிலின் நிவக்கும் கானக நாடனோடு ஆண்டு ஒழிந்தன்றே’
‘மீன் அகப்பட்ட தூண்டிலைப் போல காதலனுடன் நாட்கள் சென்று கழிந்தன’ என்ற அருமையான உவமை. (இதை எழுதியவர் பெயர் தெரியாமல் மீனெறி தூண்டிலார் என்றே உரையாசிரியர் பெயரிட் டிருக்கிறார்.
குறுந்தொகை படித்திருந்தாரோ இல்லையோ, அந்தக் கதைகளுக்கு மிகப் பொருத்தமாக ‘தூண்டில் கதைகள்’ என்று ஆசிரியர் அப்போது பெயரிட்டார். பன்னிரண்டு கதைகள் வெளிவந்தன. பிறகு 1995-ல் விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ என்று ஒரு வரிசை எழுதினேன். அந்தப் பன்னிரண்டு கதைகளும், ‘கறுப்புக் குதிரை’ என்ற பெயரில் புத்தகமாக வந்தது.
சமீபத்தில், ஆல்ஃபிரட் ஹிட்சாக்குக்காக, ஹென்றி ஸ்லேசாரின் கதைகளின் தொகுப்பு ஒன்றை என் மகன் அமெரிக்காவிலிருந்து அனுப்பியிருந்தான். அவைகளைப் படித்தபோது, மீண்டும் தூண்டில் கதைகள் எழுதும் உற்சாகம் ஏற்பட்டுவிட்டது.
குமுதம் இதழிலேயே மீண்டும் எழுதுவது எனக்குப் பொருத்தமாகப் பட்டது. குமுதம் மட்டுமல்ல, இப்போது எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் பொம்மை பார்க்கும் பத்திரிகைகளாகிவிட்டன. இந்த அபாயகரமான போக்கிலிருந்து மீட்க, நிதானமாகச் சிறுகதைக்கான சம்பிரதாய வடிவத்துடன், முடிவில் ஓர் ஆச்சரியத்துடன் பன்னிரண்டு கதைகள் எழுதுவதாக குமுதம் ஆசிரியருக்குச் சொன்னபோது, உடனே ஒப்புக்கொண்டார்.
மறைந்த எஸ்.ஏ.பி. அவர்களுக்கும் ஹென்றி ஸ்லேசாருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில், இந்தக் கதைகளை எழுதியுள்ளேன்.
இந்தக் கதைகளை உடனே புத்தகமாக வெளியிடும் விசா பதிப்பகத் தாருக்கு நன்றி.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.5 cm |
| Author | சுஜாதா |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 88 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.