ரகசியமாக ஒரு ரகசியம்!

Original price was: ₹235.00.Current price is: ₹223.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இன்று இந்திரா சௌந்தர்ராஜனிடமிருந்து கடிதம் வந்தது. மூன்றாவது கடிதம். அவரது புத்தகத்திற்கான முன்னுரையை நினைவூட்டி எழுதியிருந்தார். அவர் அனுப்பி வைத்திருந்த ஆனந்த விகடன் பக்கங்களின் ஜெராக்ஸ் நகலை, அது கிடைத்த மூன்று தினங்களுக்குள்ளாகப் படித்து முடித்து விட்டேன். ஆனால் எழுதத்தான் கை வரவில்லை. ஏதேதோ வேலைகளி னால் தட்டிப் போகிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளவா போகிறார்? சாக்குச் சொல்வதாகத் தான் நினைப்பார்.
நினைப்பார் என்ற இந்த வார்த்தையை எழுதும்போது அவரைப் பற்றிய எண்ணங்கள் மலர்கின்றன. பானுமதியின் கல்யாணத்தில் அவரைச் சந்தித்தேன். சௌபா அறிமுகப்படுத்தி வைத்ததாக ஞாபகம். மண்டபத்தை விட்டு வெளியே வந்து வாசலில் கட்டியிருந்த வாழை மரத்தைப் பிடித்து நின்று கொண்டே நிறையப் பேசினோம். இலக்கியப் பேச்சுத்தான்.
யாருடனும் முதல் அறிமுகத்தில் நான் இவ்வளவு பேசியது கிடையாது. இவரிடம் எப்படிப் பேசினேன் என்று டி.வி.எஸ். நகருக்குப் போய்க் கொண்டிருந்தபோது யோசித்தேன். அவர் எழுத்துப் பரிச்சயமாயிருந்தது காரணமாக இருந்திருக்கலாம்.
எழுத்தே எழுத்தாளர்களுக்கு முகமாகி விடுகிறது. படித்துப் பழகிவிட்ட எழுத்துப் பார்த்துப் பழகின முகமாகி விடுகிறது. தயக்கம், கூச்சம் எல்லாம் பழகிவிட்ட முகம் என்பதால் உடைந்து போய் விடுகிறது. யோசித்துப் பார்த்தால், பழகினது எழுத்துத் தான். முகமில்லை. சௌபா, செண்பா எல்லாம் இப்படிப் பழகின முகங்கள் தான்.

Additional information

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ரகசியமாக ஒரு ரகசியம்!”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories