பாலகுமாரன் சிறுகதைகள் (3 பாகம்)
Original price was: ₹1,510.00.₹1,359.00Current price is: ₹1,359.00.
Description
இந்த வாய்ப்பை உண்மை என்று என்னை நான் நம்பவைக்கவே மிகுந்த சிரமப்பட்டேன். இதை நிஜம்தான் என்று ஏற்றுக் கொள்வதற்கே நிறைய நாள்கள் தேவைப்பட்டன. பாலகுமாரன் எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்தத் தொகைநூல் ஒன்றுக்கு நான் முன்னுரைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். நான் சிறுவன், எளியவன். அவர் எழுதிய புத்தகங்களின் எடை கூட இருக்கமாட்டேன். ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய். பாலகுமாரா..!’ என்று சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆம், அவரேதான் ஆசைப்பட்டார்.
முகநூலில் என் எழுத்துகளின் அறிமுகம் பெற்றுத் தாமாக முன்வந்து என்னை உளப்பூர்வமாக வாழ்த்தினார். ‘கவிஞரே’ என்று வாயார அழைத்தார். என் கவிதைகளில் ‘தமிழ் புதிது’ என்று பின்னூட்டமிட்டார். அவர் பின்னூட்டமிட்ட அடுத்த கணங்களில் என் முகநூல் உள்பெட்டியில் வாழ்த்துகள் குவிந்தன. ‘பாலகுமாரனே பாராட்டிவிட்டார் போங்கள்…’ என்ற வியப்புகள் பெருகின. அவர் தமக்கெட்டும் எழுத்துக்களைக் கவனமாய் வாசித்து வருகிறார் என்றே கருதுகிறேன். அவரால் எழுத்துக்களின் நிறம் மணம் திடம் உணர்ந்து கூற முடியும். வாழும் எழுத்தாளர்களில் முன்னைப் பழைமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாகச் செயலாற்றிய மூத்தவர் அவரே.
எழுபதுகளின் மையத்தில் நான் பிறந்தேன். அன்று நான் சிசுவாய்ச் சுருண்டிருந்தபோது பாலகுமாரன் தமிழ்க் கதையுலகில் புயலாய்ச் சுழன்றடித்துக்கொண்டிருந்தார். எண்பதுகளின் மையத்திலிருந்து நான் கதைகள் வாசிக்கத் தொடங்கினேன். அநேகமாக என் பதின்ம வயதுகளில் சிறுகதைகளை வாசித்துப் பழகிக்கொண்டிருந்தபோது பாலகுமாரன் முழுமையான நாயகன் திரைப்படத்திற்கு எழுதிவிட்டார். ஆனந்தவிகடன் ‘பச்சை ஆகிருதியாய்த் தமிழ்ச் சமூகத்தின் முன் பேருருப் பெற்றுவிட்டார். வயல் மனது’வை தனி இணைப்பிதழாக வெளியிட்டுத் தன் வாசகப் பரப்பைப் பெருக்கிக்கொண்டது. வார இதழ்களிலெல்லாம் பாலகுமாரனின் தொடர்கதைகள். அவர் எழுதும் எழுத்தைப் படித்துத் தமிழ்நாட்டு இளையோர் பட்டாளம் உன்மத்தமடைந்து உள்ளம் நெகிழ்ந்து கிடந்தது.
முக்கியமான காலகட்டமொன்றின் சமூக மாந்தருக்குக் காதல், இல்லறம், வாழ்க்கை. மனச்செயற் களங்கள், மனிதக் கீழ்மைகள் மேன்மைகள் என மாய்ந்து மாய்ந்து கற்பித்தார். பாலகுமாரன் எழுத்துகளின் சுவையுணர்ந்து கற்றவர்கள் அவரை மானசீகமாகக் கைதொழுதனர். ‘நான் வாழ்க்கையில் எதையுமே சாதிக்கலங்க படிச்சு முடிச்சதும் வேலைக்குப் போனேன். நல்லபடியாக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், பிள்ளைகளைப் பெரிய படிப்பு படிக்க வெச்சு வேலை வாங்கிக்கொடுத்து கல்யாணம் செஞ்சு வெச்சேன். வேற எதையுமே நான் உருப்படியாச் செய்யலயே… என்று தவித்து நின்ற இல்லறத்தாரிடம் ‘நீரே சாதனையாளர், நீர் செய்தவை என்ன, எளிய செயல்கள் என்றா நினைத்தீர்… அல்ல, அவை மகத்தான செயல்கள். அரும்பெருங் காரியங்கள். இந்தக் கடமையாற்றலே பெருந்தவம்’ என்று தம் எழுத்துகளின் வழியாகப் புரியவைத்தார்.
நான் கணையாழி என்ற இலக்கியப் பத்திரிகை மூலம் நவீன கவிதையுலகில் அறிமுகமானேன். அதற்கும் முன்னே வார இதழ்களில் நான் எழுத விரும்பிய கவிதைகளுக்கு அந்நியமாய்ப் போராடிக்கொண்டிருந்தேன். எனக்குக் ‘கணையாழி’ என்ற பத்திரிகை இருப்பதைத் தெரிவித்தது பாலகுமாரனின் தன்னனுபவக் கட்டுரைகள்தாம். அவரும் சுப்ரமணியராஜுவும் கணையாழி கவிதைக் கூட்டங்களில் புடுபுடு என்று ஈருருளியில் ஒலியெழுப்பியபடி தெனாவட்டாக வந்து பங்கெடுத்ததையும் விவாதங்களில் அனல் தெறிக்கப் பேசியதையும் எழுதியிருந்தார். விவாதம் முடிந்து வெளியே புகைக்குழல் கருக கருக பேசித் தெளிந்தவற்றைக் கூறியிருக்கிறார்.
Additional information
| Weight | 1.7 g |
|---|---|
| Dimensions | 8.5 × 14 × 21.5 cm |
| Author | பாலகுமாரன் |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 1560 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.