மகாகவி பாரதியார் கவிதைகள்
Original price was: ₹750.00.₹699.00Current price is: ₹699.00.
Description
பாரதியை ஏன் வாசிக்க வேண்டும்…? இலக்கியத்தை ஏன் வாசிக்க வேண்டும் என்ற ஆகப் பழைய கேள்வி போன்றது தான் இதுவும். எனினும் நாம் பாரதியைத் திரும்பத்திரும்ப வாசிக்கத்தான் வேண்டும். நம்நாட்டின் சித்தாந்தம், தத்துவம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமான ஒரு புள்ளியாக்கினால் அது பாரதி என்றால் மிகைப்படுத்திக் கூறியதாகாது என்றே கருது கிறேன். இம்மண்ணினுடைய சிந்தனை மரபின் திரட்டு அவர். தின்ன வரும் புலியையும் அன்போடு எண்ணுவாய்’ என்று அவர் சொல்வது எதனுடைய சாரம்? அன்பும் ஆன்மிகமும் மானுட நேயமும் ஒன்றிணைந்து வந்து சேரும் இடமும் இது வாகத்தான் இருக்கிறது. அனைத்தையும் சக்தியின் வடிவாக, செயலாகப் பார்க்கும் பாரதி, கண்ணன் பாடல்களில் கண்ண னாக உருவகித்துக்கொண்டது யாரை? அல்லது எதை? கண்ணன் என் தோழன், ஆண்டான், அடிமை, சேவகன், காதலன், காதலி என்றெல்லாம் விரித்தெடுத்துக்கொண்டு சொல்லப்படுவது என்ன? வாழ்க்கை, கணந்தோறும் புதிராகத் தோன்றியபடியேயிருக்கும் இந்த வாழ்க்கை. அது தன்னைக் காட்டி நிற்கும் தருணங்கள். முன்பு ஆழ்வார் பாசுரங்களில் நின்றருளிய கண்ணன். ஆண்டாளின் கண்ணன், பின்னாளில் ஓஷோ சொன்ன கண்ணன், அத்தனை கண்ணன்களும் பாரதி யின் கண்ணனாகும்போது அவன் தானாக மாறிவிடுகிறான். வாழ்வாக மலர்ந்துவிடுகிறான்.
– சிவன்குமரன்
Additional information
| Weight | 1 g |
|---|---|
| Dimensions | 4 × 15 × 22.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 720 |
| Format | Hard cover |
| ISBN | 9788193665671 |



Reviews
There are no reviews yet.