காதலும் காதல் சார்ந்தவையும் விஜய் மில்டன் கவிதைகள்
Original price was: ₹345.00.₹328.00Current price is: ₹328.00.
Description
“இந்தக் கவிதைகள் இயல்பாகவே என்னைக் கவர்ந்ததில் எந்த வியப்புமில்லை. விஜய் மில்டன், ‘ரோஜாக் கனவு’, ‘வெள்ளைப் புறாக்கதை’ போன்ற பலவிதமான கவிதைகளை இதில் முயன்று பார்த்து அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்.”
– கலாப்ரியா
”விஜய் மில்டனின் கவிதைகள் காதலின் தீராத பிரார்த்தனை களாலானவை. கால காலமாய் எந்த தெய்வமும் இரங்கிடாத பிரார்த்தனைகள் அவை, அந்த பிரத்யேக மொழியின் சொற்களாக அது உருவாக்கும் கனவுகளே இருக்கின்றன. அந்தக் கனவுகளின் மொழிபெயர்ப்பே மில்டனின் இக்கவிதைகள்”
– மனுஷ்ய புத்திரன்
“காதல் உணர்வுகளின் ஏக்கங்களை எதிர்பார்ப்புகளை /பூரிப்புகளை – புல்லரிப்புகளை/தயக்கங்களை தவிப்புகளை /வலிகளை வதைகளை/வியப்புகளை – வினோதங்களையெல்லாம் வெகு இயல்பாக சித்திரிக்கும் கவிதைகள்!”
– இயக்குநர் பாலுமகேந்திரா
காதல் உணர்வுகளை, காதலித்தவர்கள் யாரும் காதலிக்காமல் இருக்க முடியாது. அல்லது இந்த வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் காதல் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவாவது காதலிக்கத் தொடங்குங்கள்.”
– இயக்குநர் ரா.பார்த்திபன்
“கவிஞர் வார்த்தைகளுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து அலங்கரிக்காமல் இயல்பான காதலின்பத்தோடு இந்தப் புத்தகம் முழுவதும் ஒரு நல்ல காதலின் வெளி-உள் அனுபவங்களை உணரச் செய்திருக்கிறார்.”
– இயக்குநர் அகத்தியன்
‘கொலுசுகள் பேசக்கூடும்’ என்று மில்டன் சொல்லும்போது, ‘கொலுசுகள் பேசுமா?’ என்று யாருக்கேனும் சந்தேகம் வருமா? கேட்பவர் நுட்பமான காதுகள் கொண்டவராக இருந்தால், அது பேசும் சொற்களைப் புரிந்துகொள்ள முடியும்.”
– பிருந்தா சாரதி
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.4 cm |
| Author | விஜய் மில்டன் |
| Publisher | விகடன் பிரசுரம் |
| Pages | 224 |
| Format | paperback |
| ISBN | 9789394265394 |



Reviews
There are no reviews yet.