காடோடி
Original price was: ₹360.00.₹342.00Current price is: ₹342.00.
Description
மண் மரித்த கதை…
“ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம”-நக்கீரன்
நன்கு பருத்து உயர்ந்த நெடுமரம். அதனடியில் நின்று அதன் உயரத்தை அண்ணாந்து பார்க்கிறாள். கண்கள் அதன் பெரும் விரிவை அளக்கின்றன. இரு கைகளையும் அகல விரிக்கிறாள்.
அப்படியே காதலனை அணைப்பதுபோல அம்மரத்தைக் கட்டியணைத்து முத்தமிடுகிறாள். மரவணிகராக இருந்தாலும் இம்மனிதருக்குதான் மரங்களின் மேல் என்னவொரு காதல். அருமையான மரம் தெரியுமா எனப் புகழ்கிறாள். பின்பு மரத்தை மீண்டுமொருமுறை கண்ணால் அளவிட்டுச் செல்கிறாள்.
எப்படியும் அய்யாயிரம் டாலருக்கு போகும்.
அப்படியானால் இது டாலர் காதல்தானா?
நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான குவானைப் பொறுத்தவரை மரம் என்றால் அது இலைகள் அல்ல. பூக்கள் அல்ல. காய்கள் அல்ல. கனிகளும் அல்ல. ஏன் அது மரமே அல்ல. மரம் என்றால் அது வெறும் டாலர், டாலர், டாலர் மட்டுமே….
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14.2 × 21.5 cm |
| Author | நக்கீரன் |
| Publisher | காடோடி பதிப்பகம் |
| Pages | 316 |
| Format | paperback |
| ISBN | 9788194181088 |



Reviews
There are no reviews yet.