சில நேரங்களில் சில மனிதர்கள்
Original price was: ₹425.00.₹382.00Current price is: ₹382.00.
Description
பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையின் நீட்சியாக உருவான ‘சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல். ஒரே சம்பவத்தின் மாறுபட்ட சாத்தியக் கூறுகளைப் பற்றிய சிந்தனைக்கான வாசல்களைத் திறந்துவைக்கிறது.
ஒரு சம்பவத்தின் விளைவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நிஜ வாழ்வில் அதன் சாத்தியங்கள் எண்ணற்றவை; புனைவிலும் அப்படித்தான். பதின் பருவத்தில் வன்புணர்வுக்கு ஆளான ஒரு பெண் சமூகத்தின் பார்வையில் களங்கப்பட்டு நிற்கிறாள். ஆனால் அந்தக் களங்கத்தைக் கண்டு ஒடுங்கிவிடாமல் கம்பீரமாக எழுந்து நிற்கிறாள். தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் துணிவுடன் செயலாற்றுகிறாள்.
தமிழ்ப் புனைவுலகின் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்றாக இந்த நாவலின் நாயகி உருப்பெறுகிறாள். அந்தப் பாத்திரத்தின் முன்னிலையில் மற்றவர்கள் சிறுத்துப்போகாமல் தத்தமது அடையாளங்களுடன் காத்திரமாக வெளிப்படுகிறார்கள். இதன் மூலம் அவளோடு சம்பந்தப்பட்ட அனைவருக்குமான நியாயத்தை ஜெயகாந்தன் வழங்குகிறார்.
தனியொரு பெண்ணின் கதையைச் சொல்லவந்த ஜெயகாந்தன் அதன்வழி சமூகத்தின் மதிப்பீடுகளையும் தீவிரமாகக் கேள்விக்குட்படுத்துகிறார். கருத்தின் மூலம் அல்லாமல் வாழ்வின் அசைவுகளைக் கலாப்பூர்வமாகச் சித்தரிப்பதன் மூலம் இதைச் செய்கிறார்.எழுதி 55 ஆண்டுகள் கழித்தும் வாசகர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றுவரும் இந்த நாவல் நவீன இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகளுள் ஒன்றாக மிளிர்கிறது.
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2 × 13.6 × 21.4 cm |
| Publisher | காலச்சுவடு |
| Pages | 376 |
| Format | paperback |
| ISBN | 9789384641016 |



Reviews
There are no reviews yet.