போராட்டங்களின் கதை
Original price was: ₹340.00.₹323.00Current price is: ₹323.00.
Description
“நாம் இன்றைக்கு மிகவும் சொகுசாக அனுபவிக்கும் எல்லா நடைமுறைகளுமே எப்படி வந்தன? எப்போது வந்தன? நம்முடைய எட்டு மணி நேர வேலை நேரம், சம்பளம், விடுமுறைகள், வாக்குரிமை, சொத்துரிமை தொடங்கி நம்முடைய பெண்கள் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ளும் உரிமை வரை நம்முடைய அன்றாட வாழ்வின் அனைத்துமே இந்த மனித சமூகம் போராடிப் பெற்றவையே.
தீண்டாமைக் கொடுமைகள், கல்வி கற்கும் உரிமை, ஊர் குளத்தில் நீர் பருகும் உரிமை, சாலைகளில் நடமாடும் உரிமை, கோவில்களில் நுழையும் உரிமை என எதன் வரலாற்றை அறிந்துகொள்ள முயன்றாலும் போராட்டங்களின்றி எதுவும் சாத்தியமாகியிருக்காது என்பது உறுதியாகிறது. ஜனநாயகமும் போராட்டங்களும் இல்லையெனில் இப்படியான ஒரு நீதியுடன் கூடிய சமூகமாக அல்லாமல் ஓர் அடிமைச் சமூகமாகவே நம் வாழ்வும் கழிந்திருக்கும்.
அடிமைச் சமூகத்தில் இருந்து நம் சமூகம் விடுதலை பெற்ற வரலாற்றின் மிக முக்கிய தருணங்களை, அதன் சூழலை. அதன் நியாயங்களை இந்தப் புத்தகத்தின் ஒவ்வோர் அத்தியாயமும் நமக்குக் காட்சிப்படுத்துகிறது. ஜனநாயகத்தையும் நாம் போராடிப் பெற்ற உரிமைகளையும் அதன் முழு அர்த்தத்தில் அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு மிக முக்கிய அரசியல் கையேடாக இந்த நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.”
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 1 × 16.5 × 23.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 288 |
| Format | paperback |
| ISBN | 9789394265479 |



Reviews
There are no reviews yet.