அக்டோபர்: கொஞ்சம் மழை, கொஞ்சம் தேநீர், நிறைய கவிதைகள்.
Original price was: ₹80.00.₹68.00Current price is: ₹68.00.
Description
ஒரு நீண்ட பொழுதின் தொடக்கத்தை நமக்கு அறிமுகப்படுத்தும் “தேநீரும்”, ஒரு நீண்ட இரவை நமக்கு அறிமுகப்படுத்தும் “நிலவும்” ஒருவகையில் யாரையும் காயப்படுத்தாத மனிதர்களுக்கு கிடைக்கும் பேராறுதல். அப்படியாக இக்கவிதைத் தொகுப்பு முழுவதும் தேநீராலும் நிலாவாலும் நிரம்பியிருக்கிறது.
ஒரு கோப்பை தேநீரின் சுவையை மழை சற்றுக் கூடுதலாக அதிகரிக்கும், மழைக்கும் தேநீர்க்கும் அப்படி ஒரு பிணைப்பு.
எவ்வளவு நிராகரிப்புகள் இருந்தாலும் அதை ஒரு டீயில் கடந்து செல்லும் மனிதர்களும், அதே போல காயத்தோடு சற்று நேரம் மொட்டைமாடியில் நின்று, நிலவை வெறித்துப் பார்த்து ஆறுதலடையும் மனிதர்களும் இங்கு ஏராளம், அதில் நானும் ஒருத்தி.
“எப்படி இருந்தாலும் நேசிக்க
நீயென்ன நானா?”
என்ற இரண்டு வரிக் கவிதை, ஒருவரின் மீதான அளவுகடந்த கண்மூடித் தனமான மொத்தக் காதலையும் காட்டுகிறது.
“தேடல் நிறைந்த மனங்களுக்கு
தேநீர் தானே ஆறுதல்!”
என்னும்போது, எங்கே ஒரு தேடல் அளவற்று போய்க்கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு தேநீர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் என்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
“எனக்கு நிலவினை ரசிக்க
சொல்லிக்கொடுத்தவள் “அம்மா”
நினைக்க சொல்லிக் கொடுத்தவள் நீ!”
என்று நிலவை நமக்கு சோறு ஊட்ட அறிமுகப்படுத்திய அம்மாவையும், நேசம் மிகுந்த அன்பானவர்களின் நினைவால் நாம் பார்க்கும் நிலவு, அவர்களையும் நினைவுப்படுத்தும் என்பதை ஆழமாக பதிவு செய்கிறார்.
– இனிதி
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 11.5 × 17 cm |
| Author | அன்பினி |
| Publisher | இறைவி வெளியீடு |
| Pages | 60 |
| Format | paperback |
| ISBN | 9789349765726 |



Reviews
There are no reviews yet.