அடுத்த நூற்றாண்டு

Original price was: ₹185.00.Current price is: ₹176.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

எழுபது, எண்பதுகளில் கதையும் நாவலும் எழுதி பிரபலமாகிக் கொண்டிருந்த சுஜாதாவை பல கல்லூரிகளில் அழைத்துப் பேசச் சொன்னார்கள். அப்போது அங்குள்ள மாணவர்களின் சூழ்நிலை உளப்போக்குகளை நன்கு அறிந்து கவலைப்பட்டார்.
எதிர்காலச் சிற்பிகளான இளம் உள்ளங்களைச் செம்மைப்படுத்த எண்ணி அவர்களுக்கு நல்ல அறிவுரை களைப் புகன்றார். கதை, கவிதை, எழுதக்கூடியவர்களை ஊக்கப்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர் கள் சிறந்தோங்க வேண்டுமென்று எண்ணினார். அதன் விளைவாக பல்வேறு விஞ்ஞானக் கதைகளை எழுதினார்.
அவை வேடிக்கைக் கதையல்ல. விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டவை. அந்த விஞ்ஞானத்தையே எளிதில் புரிந்துகொள்ள மிகச் சுலபமாக கதை போல பல கட்டுரைகளை எழுதி எல்லோரையும் படிக்கச் செய்தார். இந்த இருபதாம் நூற்றாண்டில் என்னென்ன நிகழப்போகிறது. அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் இந்தப் புத்தகத்தில் தெளிவாய்க் கண்டு அறியலாம்.
கம்ப்யூட்டர் இயங்கும் விதம் பற்றியும் அதன் மூலமாக விளையும் அற்புதங்களைப் பற்றியும் எல்லோருக் கும் புரியும் வகையில் எளிமையாகப் பல்வேறு தலைப்பு களில் இந்த நூலில் தந்துள்ளார்.
விஞ்ஞானத்தைப் பரப்ப அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வரும் நேரமிது. 1987-இல் இளையாங்குடி டாக்டர் ஜாகிர்ஹுசேன் கல்லூரியில் நடந்த அறிவியல் தமிழ் கருத்தரங்கில் சுஜாதாவுக்கு ‘அறிவியல் இலக்கியச் செல்வர்’ என்ற பட்டத்தைக் குன்றக்குடி அடிகளார் வழங்கினார். அதே கூட்டத்தில் சுஜாதா தமிழில் கம்ப்யூட்டர்களை புகுத்த வேண்டுமென்றார். இது பலருக்குச் சாத்தியமாகப்பட் சாத்தியமாக இருப்பதை ஜப்பான் வில்லை. இது போய் வந்த சுஜாதா தெளிவுபட விளக்கினார்.
பிப்ரவரி 28-ஆம் தேதியை தேசிய விஞ்ஞான தினமாக அரசு அறிவித்துள்ளது. ஏனெனில் இந்த நாளில் விஞ்ஞாவி சர். சி.வி. ராமன் ஒளியின் இயல் பற்றி ‘ராமன் விளைவு என்னும் அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டு மேற்கத்திய விஞ்ஞானத்தில் இந்தியா உலகப் புகழ் அடையச் செய்தார்.
அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அதிக வசதியும் விஞ்ஞானிகளுக்கு அதிக வருவாயும் கிடைக்கிறது.
நமது நாட்டில் இன்னும் அந்த அளவுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் பெருகவில்லை என்பதே உண்மை. அண்மையில் நமது மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டது. போன்ற கொடிய நிலநடுக்கங்களைக்கூட முன்னதாகவே சண்டறியக்கூடிய சாத்தியக்கூறுகளும் விஞ்ஞான வசதிகளும் கருவிகளும் மேலை நாடுகளில் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். நமது நாட்டிலும் விஞ்ஞான முன்னேற்றம் நாளும் பெருகி வருகிறதென்றாலும் இன்னும் வளர வேண்டியுள்ளது.
மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் கம்ப்யூட்டர் இயலில் பெரும் ஆர்வம் கொண்டு அத்துறையின் முன்னேற்றத்திற்குத் தேவையான திட்டங் களைத் தீட்டினார். அந்த அடிப்படையில் இன்றைய அரசும்கூட மிகக் கவனம் செலுத்தி அறிவியல் – விஞ்ஞாலம் வளர பள்ளிகளிலும் நூலகங்களிலும் நல்ல புத்தகங்களை வாங்கி வருகிறது. இந்த நல்ல நேரத்தில் சுஜாதாவின் “அடுத்த நூற்றாண்டு புத்தகத்தை வெளியிட்டு நாங்களும் இந்த நற்பணிக்கு உதவுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

Additional information

Weight 0.15 g
Dimensions 0.8 × 12 × 18 cm
Author

சுஜாதா

Publisher

திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்

Pages

184

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “அடுத்த நூற்றாண்டு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories