அதீதத்தின் ருசி
Original price was: ₹280.00.₹266.00Current price is: ₹266.00.
Description
மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவாளியைப் போல் நம் மறைவிடங்களைக் கண்காணிக்கிறது. உறவுகளின் பாசாங்குகளை விலக்கி துரோகம் செய்கிறது. சாத்தானோடும் கடவுளோடும் சச்சரவிடுகிறது. சொற்களையும் நம் மனங்களையும் தொடர்ந்து கலைத்து அடுக்குவதன் மூலம் பெரும் அமைதியின்மையை உருவாக்குகிறது.
மனுஷ்ய புத்திரனால் குறுகிய காலத்தில் எழுதப்பட்ட இந்தத் தொகுப்பில் அவரது படைப்பு நிலையின் உச்சங்களைத் தொட்ட பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.2 × 12 × 18 cm |
| Author | மனுஷ்ய புத்திரன் |
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Pages | 246 |
| Format | paperback |
| ISBN | 9789380072647 |



Reviews
There are no reviews yet.