அனிதா-இளம் மனைவி
Original price was: ₹90.00.₹85.00Current price is: ₹85.00.
Description
குமுதம் இதழில் நான் எழுதிய முதல் தொடர்கதை ‘நைலான் லான் கயிறு’. ‘அனிதா இளம் மனைவி இரண்டாவது.1971ல் எழுதியது என்று ஞாபகம். நான் இதற்கு வைத்த தலைப்பு ‘அனிதா’ மட்டுமே.
குமுதம் எடிட்டோரியல் அதை அனிதா- இளம் மனைவி’ என்று மாற்றினார்கள். இதனால் கதையின் மேல் ஆர்வம் கூடுகிறது என்று அவர்கள் எண்ணி யிருக்கலாம்.
இதனிடையே தினமணி இதழில் ‘காயத்ரி’ என்னும் குறுநாவல் வெளிவந்தது. அதை திரு. பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க அனுமதி கேட்டிருந்தார். அப்போது ‘அனிதா-இளம் மனைவி யும் தொடர்கதையாக வந்தது. பஞ்சு அருணாசலம் அதைப் படித்து விட்டு உடனே இதையும் சினிமா எடுக்கலாம் என்றார். காயத்ரி வெளிவந்தது. அதனுடன் பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’யும் வெளிவந்து தமிழ்சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை துலக்கியது. அதில் ரஜினிகாந்த் அடிக்கடி ‘இது எப்படி இருக்கு? என்று கேட்பார் அந்த சொற்றொடர் பிரபலமாகியது.
பஞ்சு அருணாசலம் நிறைய சென்டிமெண்ட் பார்ப்பவர் அனிதாவை திரைப்படமாக்குகையில் அதன் பெயரை ‘இது எப்படி இருக்கு?’ என்று மாற்றினார். ஜெய்சங்கர், மேஜர் சுந்தரராஜன் போன்றவர்கள் நடித்தார்கள். படம் ஓடவில்லை. அது எடுக்கப்பட்ட விதத்தில் எந்தப் பெயரிலும் ஓடியிருக் காது. பஞ்சு அருணாசலம் சளைக்கவில்லை. அடுத்து ‘ப்ரியா’ எடுத்தார். அதன் திரைவடிவிலும் எனக்கு திருப்தி இல்லை. இருந்தும் சிங்கப்பூர், டால்பின் ஷோ, இளையராஜாவின் ‘இன்றும் இனிக்கும் பாடல்களுக்காக அது வெற்றிபெற்றது. பின்னர் பஞ்சு அருணாசலம் என் நாவல்களை விட்டுவிட்டார்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author | சுஜாதா |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 128 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.