அவன் காட்டை வென்றான்
Original price was: ₹110.00.₹104.00Current price is: ₹104.00.
Description
தமிழாக்கம் : ஏ.ஜி.எத்திராஜுலு
இந்த நாவலில் மனித பாத்திரம் ஒன்றே ஒன்றுதான். அதற்கும் பெயரில்லை. கிழவன் என்ற பெயர் மட்டுமே. அவன் இருப்பிடம் எந்த ஊரோ தெரியாது. கதை முழுவதும் கிழவனைச் சுற்றியே நடக்கிறது. மனிதரல்லாத முக்கியப் பாத்திரம் தாய்ப்பன்றி. இப்படைப்பு முழுவதும் கிழவனும் தாய்ப்பன்றியும் சம்பந்தப்பட்டதே. இதிலுள்ள மற்ற பாத்திரங்கள் விலங்குகள், மலைகள், மடுக்கள், நீரோடைகள், பள்ளத்தாக்குகள், கல் மண்! காடே இக்கிழவனின் விளையாட்டு மைதானம். மிருகங்களும் செடிகொடிகளுமே கிழவனின் நண்பர்கள். அபாயங்கள் அவனுக்கு வெல்லம் போல. இந்த உலகமே தன் கால்களுக்கடியில் இருப்பது போலவும், தான் நினைத்தால் தன் கல்தூண்களைப் போன்ற கால்களால் இந்த உலகையே தூளாக்கிட முடியும் என்ற உறுதியும் அவனுடையது. தான் உண்டாக்கிய தூளில் தானும் தூளாகி விட்டாலும் பெரிதாக என்ன குடி முழுகிவிடும் என்னும் அலட்சியம் அவனுக்கு!
கேசவ ரெட்டி, காட்டையும் அதன் விசுவரூபத்தையும் நமக்குக் காட்டி, சிறிய கதைக்கருவுக்குப் பெரிய பின்னணியைப் படைத்துத் தந்துள்ளார். இந்தப் பின்னணியைப் படைப்பதில் மிகச்சிலரே வெற்றி கண்டுள்ளனர். கேசவ ரெட்டியும் அவர்களில் ஒருவர்.
ஏஜி. எத்திராஜுலு, தமிழிலிருந்து தெலுங்குக்கும். தெலு ங்கிலிருந்து தமிழுக்கும் ஏராளமான நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.4 cm |
| Author | கேசவ ரெட்டி |
| Publisher | NBT / நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா |
| Pages | 90 |
| Format | paperback |
| ISBN | 9788123716480 |



Reviews
There are no reviews yet.