ஆடுகளம் திரைக்கதை மூலப்பிரதி
Original price was: ₹350.00.₹332.00Current price is: ₹332.00.
Description
கலையம்சமும் ஜனரஞ்சகத் தன்மையும் அற்புதமாகக் கூடி முயங்கிய வெற்றித திரைப்படம் ஆடுகளம் இந்தத் திரைப்படம் எடுக்கப்படுவதற்காக இயக்குநர் வெற்றிமாறனால் எழுதப்பட்ட திரைககதையின் புத்தக வடிவம் இது ஒரு சிறந்த திரைப்படப் படைப்பாளியின பார்வையிலிருந்து திரைப்பட மொழியில் உருவான திரைக் கதை ஒரு திரைக்கதை எவ்வளவு நேர்த்தியாகவும் துல்லியமாகவும் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது அதன் களத்தில் காட்சிப்படுத்தப்படும் போது சில மாற்றங்களுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது மனதில் கருவும் உருவும் கொண்ட கதை உலகம், களத்தில் வடிவம் பெறும்போது. களத்தின் சாதக பாதகங்களுக்கேற்ப சில மாற்றங்களுக்கு உள்ளாகிறது. களத்தின் முன்புல, பின்புலச் சூழல், காலம், வெளி, அந்நேரத்திய கற்பனை, கால வரையறை போன்ற பல்வேறு காரணிகளால் இந்த மாற்றங்கள் நேர்கின்றன. திரைப்படமாக்கலின் போது நிகழ்ந்த இத்தகைய சில மாற்றங்களை அந்தந்த இடங்களில் குறிப்புகளாகத் தந்திருப்பது இந்தப் புத்தகத்தை மேலும் சிறப்பானதாய் ஆக்கியிருக்கிறது. திரைப்படமாக்கலின்போது நிகழ்ந்த இந்த மாற்றங்களை அவதானிப்பது திரைப்பட மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் பெரும் பேறாக அமையும்.
அதேசமயம், மனித மனோபாவங்கள் மற்றும் அடிப்படை உணர்ச்சிகளின் பின்னங்களில் உயிர்கொண்டிருக்கும் திரைக்கதைப் படைப்பு இது ஒரு குறிப்பிட்ட கால, இட, சமூகப் பின்புலத்தில் நிகழும் இந்தக் கதை. கால-இட -வெளி கடந்து மனித மன இருட் பிரதேசங்களின் ஆடுகளமாக விரிந்து வியாபித்திருக்கிறது. அதன் காரணமாக, இந்தப் படைப்புலகிற்குள் நுழையும் ஒவ்வொரு வாசகனுக்கும் பெறுமதியான அனுபவமாக இது அமையும்.
– சி.மோகன், நாவலாசிரியர்
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.4 cm |
| Author | வெற்றி மாறன் |
| Publisher | அடையாளம் |
| Pages | 300 |
| Format | paperback |
| ISBN | 9788177201741 |



Reviews
There are no reviews yet.