இதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Description
இதில் உள்ள இரண்டு கதைகளும் தனித்தனிப் புத்தகமாக வெளியிடப்பட்டவை. ‘இதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்’ கதை இவ்வாண்டிலும், ஒரு குடும்பத்தில் நடக்கிறது’ இரண்டாண்டுகளுக்கு முன்பும் எழுதப்பட்டவை.
எனது கதைகளில் பல இக்காலச் சமூகப் பெண்களின், படித்த பெண்களின், உழைக்கும் பெண்களின் வாழ்க்கையில் நேர்ந்து விடுகிற அவலங்களையும் அவற்றை எதிர்த்து அவர்கள் எவ்வாறு என்பதையும் சித்திரிப்பனவாகவே போராடுகிறார்கள் அமைந்திருக்கின்றன.
அவர்கள் எப்படிக் கெட்டுப் போகிறார்கள், அல்லது கெட்டுப் போவதில் இன்பம் அடைகிறார்கள், அந்தக் கேடான வாழ்வின் நுணுக்கங்கள் என்னென்ன, அதில் ஆசிரியனின் ஈடுபாடு எத்தகையது, வாசகர்களும் அவற்றைப் படித்து எத்தகைய கிளுகிளுப்புணர்ச்சியை அடையலாம் என்று சித்திரிக்கவே இத்தகைய கதைப் பொருளைச் செயற்கையாகக் கையாளும் எழுத்துக்கள் மலிந்து வருகிற இக்காலத்தில்-
இந்தச் சமூகத்துப் பெண்களின் தந்தை போன்ற மனப் பக்குவத்துடன் இவர்களது வாழ்வில் நேரும் அவலங்களைக் கண்டு சொல்லுகிற கலை எழுதுகிற புருஷோத்தமர்கள் தங்கள் எழுத்துக்களின் மூலம் சமூக ஆண்மைக்குப் புது வடிவம் தர முடியும் என்று நான் நம்புகிறேன்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author | ஜெயகாந்தன் |
| Publisher | மீனாட்சி புத்தக நிலையம் |
| Pages | 108 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.