இரவாடிய திருமேனி
Original price was: ₹699.00.₹665.00Current price is: ₹665.00.
Description
வேல்முருகன் இளங்கோவின் இந்நாவலை காவியம் அல்லது எதிர்-காவியம் என்ற வகைமையில் நிறுத்தலாம். வாழ்வு குறித்து நாம் ஒருபோதும் விடை காணமுடியாத கேள்விகளோடு, அதிகாரம், உறவு, இருப்பு, மரணம் ஆகியவற்றை அடி பொருளாகக் கொண்டு மதுரை மற்றும் மேற்கு மலைக் காட்டின் பின்னணியில் நாவல் விரிகிறது.
கடந்த காலத்தை இரண்டாம் ஜாமம், குறு வாள், உப்பரிகை, சாமரம் போன்ற சொற் சேர்ப்பு
விளையாட்டுகளில் நிகழ்த்தி விட முடியாது. படைப்பாளி தன்னைக் கரைத்து அந்த காலத்திற்குச் செல்ல வேண்டும். இதை எழுதிய ஆண்டுகளில் வேல்முருகன் இளங்கோ தன் வீட்டிற்கு ஒவ்வொரு இரவிலும் குதிரையிலேயே திரும்பியிருப்பார் என நம்புகிறேன்.
நாவலில் இரவாடிய திருமேனி எனும் காவியத்தை இயற்ற வருபவன் தன் காவியத்திற்குள்ளேயே ஒரு பாத்திரமாய் சிக்கிக் கொள்வதைப் போல் நாமும் அதன் மொழி அழகிலும், அது எழுப்பும் ஆதாரமான, உணர்வுப்பூர்வமான கேள்விகளின் வழி சிக்கிக் கொள்கிறோம். அதுவே இரவாடிய திருமேனியை தமிழின் மிக முக்கியப் படைப்புகளில் ஒன்றாக ஆக்குகிறது – சாம்ராஜ்
Additional information
| Weight | 0.75 g |
|---|---|
| Dimensions | 3.6 × 15 × 22.6 cm |
| Author | வேல்முருகன் இளங்கோ |
| Publisher | எதிர் வெளியீடு |
| Pages | 480 |
| Format | Hard Cover |
| ISBN | 9788119576876 |




Reviews
There are no reviews yet.