உலக சினிமா
Original price was: ₹225.00.₹224.00Current price is: ₹224.00.
Description
சுற்றுச்சூழல் மாசு அடைவது குறித்து உணரத் துவங்கியிருக்கிற நாம். தினமும் காட்சி ரீதியாக மனசுக்குள் படிந்துகொண்டிருக்கும் மாசு குறித்த விழிப்புணர்வை அடைந்து இருக்கிறோமா?
தவறுதலாக நாம் எடுத்துக்கொள்ளும் மோசமான ஓர் உணவு. அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு நமக்குத் தொந்தரவாக இருக்கலாம் ஆனால், வெறும் பொழுதுபோக்குத்தானே என்று நினைத்துத் தொடர்ச்சியாக நாம் பார்த்துக்கொண்டிருக்கும் தவறான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், மெல்லக் கொல்லும் நஞ்சு (Slow poison) போல முழு வாழ்க்கைக்குமான நம் இயல்பையே மாற்றத் துவங்குகின்றன.
இருட்டைப் பற்றி புலம்புவதைவிட ஒரு விளக்கை ஏற்றி வையுங்கள்’ என்றொரு பழமொழி இருக்கிறது. தவறான படங்களைப் பற்றி வருந்துவதைவிட நல்ல படங்களை அறிமுகப்படுத்துவதே சிறந்தது. அந்த வகையில் உலகமெங்கும் எடுக்கப்பட்ட நல்ல படங்களைத் தேடிப் பார்ப்பதன் மூலம் மோசமான திரைப்படத்தை மட்டுமல்ல. நல்லவை என்ற போர்வையில் இருக்கும் போலிகளையும் நாம் அடையாளம் காணமுடியும். அதற்கு ஒரே வழி உலகின் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பதுதான்.
சூழல் மாசுபடுவதைத் தடுக்க, மரம் வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதுபோல, காட்சி ரீதியாக மாசுபடுவதைத் தடுக்க, குறைந்தது இருபது சிறந்த உலகப் படங்களையாவது நாம் பார்த்திருக்க வேண்டும்.
Additional information
| Weight | 1.1 g |
|---|---|
| Dimensions | 4.3 × 14.9 × 22.5 cm |
| Author | செழியன் |
| Publisher | சீர் வாசகர் வட்டம் |
| Pages | 768 |
| Format | Hard Cover |
| ISBN | 9788197673306 |



Reviews
There are no reviews yet.