ஒரு மனுஷி
Original price was: ₹220.00.₹198.00Current price is: ₹198.00.
Description
பிரபஞ்சன் எனும் புனைபெயரில் எழுதிய சாரங்கபாணி வைத்திலிங்கம், பிரஞ்சியர் ஆண்ட புதுச்சேரியில் 27.04.1945ல் பிறந்தவர். பள்ளிக்கல்வியை புதுச்சேரியிலும், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் கல்வியும் பெற்றவர். 1961ம் ஆண்டு அவரது முதல் கதை பிரசுரம் கண்டது. 2017 வரை அவர் எழுதிய கதைகள் அனைத்தையும் ‘எழுத்துலகில் பிரபஞ்சன்-55’ என்று பிரபஞ்சன் புகழுக்கு வாசகர்கள் முன்னெடுத்த நிகழ்வில், சிறப்புப் பதிப்பாக ‘டிஸ்கவரி பதிப்பகம்’ மூன்று பெரும் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறது.
பிரபஞ்சன் கதைகள், மானுட மகத்துவம் பேசுபவை; சாதாரண மனிதருக்குள் புதைந்து கிடக்கும் பரிவை, அருளை, நியாய உணர்வை. ஒரு சினேகிதனின் நெகிழ்ந்த தொனியில் சொல்பவை; ஊற்றுநீர்போலக் கனிந்து, சந்தர்ப்பங்களில் வெளிப்படும் மனிதர்களின் அரிய மானுடத் தருணங்களை இனம்கண்டு, கலாபூர்வமாக விளம்புபவை. பகை, வெறுப்பு. துவேஷம் எதுவுமற்ற மனம் கொண்ட ஈரத் தமிழ்க் கதை சொல்லியான பிரபஞ்சன், தன் காலத்துப் புனைவைச் செழுமைப்படுத்திய எழுத்தாளர், வரலாற்று நாவல்துறையில் ஒரு புதிய பாதை வகுத்தவர். கட்டுரைகள், நாடகம் என சமூக இலக்கியத்துறையில் தொடர்ந்து இயங்கியவர். தமிழ் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இலக்கியத்தில் படைப்புளைத் தந்த பிரபஞ்சன், 2018 டிசம்பர் 21ம் தேதி மறைந்தார்.
-பி.என்.எஸ்.பாண்டியன்
தலைவர், பிரபஞ்சன் அறக்கட்டளை
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.6 cm |
| Author | பிரபஞ்சன் |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Pages | 168 |
| Format | paperback |
| ISBN | 9789391994648 |



Reviews
There are no reviews yet.