கனவுகள் விற்பவன்

Original price was: ₹275.00.Current price is: ₹261.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

கிழவனுக்கு எதிரே சோற்றுப் பாத்திரம் டொக்கென்ற ஓசையோடு வைக்கப்பட்டது.
விரிந்த காதுக்குள் விழுந்த எந்த சப்தத்தையும் மனசுள் வாங்காத கிழவன். இந்த ஓசை கேட்டதும் மெல்ல திரும்பினான் அவன் திரும்புவதற்குள் வாயில் எச்சில் சுரப்பிகள் மலர்ந்தன, கசிந்தன. கிழவன் தலை திரும்பப்படுவதைக் கட்டுப்படுத்தினான். இன்னும் இரண்டங்குலம் வலப்பக்கம் திரும்பினால் சோற்றுத் தட்டை முழுவதும் பார்த்துவிட முடியும். விளிம்பு மட்டுமே இப்போது தெரிகிறது.
தலை நேராகி கிழவன் மறுபடி தெருவை வெறிக்க ஆரம்பித்தான்.
இப்படி உட்கார்ந்து முப்பத்து நாலு வருடமாகி விட்டது இன்னும் புத்தியை நிறுத்த முடியவில்லை காது ஓசையை அறுக்க முடியவில்லை எப்பவாவது காது ஓசை மொத்தமும் அடைத்து கண்ணைப் பஞ்சாக்கி, உடம்பை லேசாக்கி, நெற்றியை நெருப்பு மாதிரி சுட வைக்கிறது. சில சமயம் ஐயோ என்று எழுந்திருக்கும் படியாகிறது.
சில சமயம் மறந்து பசி தெரிகிறது. மனிதர்களை மனிதர்களால் அடையாளம் தெரிகிற உலக வழக்குகள் நினைவுக்கு வருகின்றன அம்மா, அப்பா, தம்பி, மனைவி, குழந்தைகள் என்று தெரிகின்றன.

Additional information

Weight 0.3 g
Dimensions 1.6 × 12 × 18 cm
Author

பாலகுமாரன்

Publisher

திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்

Pages

368

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கனவுகள் விற்பவன்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories