கரியோடன்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
சாரோன் இருபது ஆண்டுகளின் பரப்பில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு “கரியோடன்,” மாணவப் பருவத்திலிருந்தே சாரோன் சமூக நீதித் தேடலை வாழ்வியலாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தத் தேடல் தான் இவருக்குக் கிடைத்த பேராசிரியர் பணியை விட்டுவிட்டு ஆவணப்படங்களை இயக்குபவராக ஆக்கியிருக்கிறது. சாரோனின் இந்த ஆர்வமே இவரது கதைகளின் உள்ளியக்கமாக உள்ளது. இவர் சார்ந்த பேரணாம்பட்டு மலைப்பகுதி வாழ்வைப் பல கதைகள் பேசுகின்றன. இயற்கையை வென்றும் அதனிடம் தோற்றும் வாழும் மனிதர்களின் வாழ்வியல் நுட்பங்களைக் கதைகள் சொல்லுகின்றன. அம்மக்களின் மொழி கதைகளில் அப்படியே படிந்துள்ளது. சில நேரங்களில் உணர்ச்சி மேலீட்டால் கவிதையாகவும் ஆகிவிடுகிறது. இயற்கையில் திளைத்து சுதந்திரம் காணபவர்களாக இவர் பாத்திரங்கள் இருக்கிறார்கள். கதைகளிலிழையோடும் சோகமும் சமூக நீதிக்கான குரலாகவே ஒலிக்கிறது. வலிகளும் பெருமிதமாகவே சொல்லப்படுகின்றன. கிராம வாழ்வு, நகர வாழ்வு, புலம்பெயர் வாழ்வு எனக் களங்கள் மாறினாலும் சமூக நீதிக்குரல் மாறுவதில்லை. பெரும்பாலும் இளைய பாத்திரங்களே இடம்பெறும் இவரது கதைகள் பிற உயிரினங்களையும் உணர்வுகளையும் பிரிக்க முடியாத கூறுகளாகக் கொண்டுள்ளன. நுட்ப விவரணைகள் இவரது தனி அடையாளம். இவை படமாக நம் நெஞ்சில் கதையை விரிக்கின்றன. இதனால் இக்கதைகள் புனைவாக இல்லாமல் அனுபவப் பெயர்ப்பாக ஆகின்றன. வாசிப்பவரின் உள்ளத்துள் படிந்திருக்கும் அனுபவங்களோடு இவை ஒன்றுகின்றன.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author | சாரோன் |
| Publisher | எதிர் வெளியீடு |
| Pages | 200 |
| Format | Paperback |
| ISBN | 9789390811274 |



Reviews
There are no reviews yet.