காடர்
Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.
Description
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் வெவ்வேறு கதைக்களங்களின் வாயிலாக காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத்
திறந்து காட்டுகிறது. புலிகள் காப்பகம் அமைப்பதாய்ச் சொல்லி பழங்குடி, ஆதிவாசி மக்கள் காட்டில் இருந்து விரட்டப்படுவது, அப்படி விரட்டப்பட்ட மக்களுக்கு செட்டில்மெண்ட் ஏரியா அமைத்து அதற்கு பட்டா கூடக் கொடுக்காமல் நிரந்தரமாகவே அந்த மக்களை காட்டில் இருந்து விரட்டி விட்டு தொழில்துறை நிறுவனங்களுக்கு காட்டைத் திறந்து விடும் அரசாங்கத்தின் செயல்பாடுகள், ஆபத்து மிக்க சுரங்கங்களில் சுரண்டப்படும் எளிய மக்களின் உழைப்பு, யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் ஊருக்குள் புகும் யானைகள், மலைவாழ் மக்களுக்கு இன்றளவும் போய்ச் சேராத அடிப்படைக் கல்வி, அதையும் மீறி அந்த மக்களின்பால்
உண்மையான கரிசனத்துடன் இருக்கும் சில ஆசிரியர்கள் என காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் அத்தனை பரிணாமங்களையும், இன்மைகளையும் மிகத் துல்லியமாக தனது கதைகளின் வழியாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பிரசாந்த். – மு. குணசேகரன்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author | பிரசாந்த் வே |
| Publisher | எதிர் வெளியீடு |
| Pages | 112 |
| Format | Paperback |
| ISBN | 9788194734000 |



Reviews
There are no reviews yet.