காதல் சதுரங்கம்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
இது ஒரு வெற்றித்தொடர்! இதன் வெற்றியை இந்தத் தொடரை இதயத்தில் எழுதத் தொடங்கும் போதே தீர்மானித்துவிட்டேன். இது நிச்சயம் ஒரு சலசலப்பை பார்வையை உருவாக்கப்போகிறது என்றும் நம்பினேன். என்னை அது ஏமாற்றவில்லை.
பொதுவில் காதல் காதலிப்பவர்களை வேண்டு மானால் படுத்தி எடுக்கும். பார்வையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் அது என்றும் சஞ்ஜீவி பர்வதம்தான்.
அதனால்தான் சினிமா, டி.வி. நாவல் எல்லா வற்றிலும் அதற்கு அப்படி ஒரு ரத்தினக் கம்பன வரவேற்பு-
புராணகாலம் தொட்டே இதுதான் நிலை..
ஏன் இந்த ஒரு விஷயம் மட்டும் திகட்டாதபடி ஜெயித்துக் கொண்டேயிருக்கிறது என்று நான் யோசித்த துண்டு. வாழ்வில் எத்தனையோ உணர்வுகள். பாசம் அன்பு, கடமை என்று அந்த உணர்வுகளின் தளங்களும் மிகப் பெரியவை. ஆனால் காதல் உணர்ச்சி மட்டும் எல்லா மனித மனதுக்கும் பொதுவாக இருக்கிறது அதனால்தான் அது மிக நேசிக்கப்படுகிறது.
இதே காதல் இளமையில் மயக்கி பின் நடுமையில் மாறிப்போய் விடுகிறது. அதைத்தான் இந்த தொடரில் சொல்லியிருக்கிறேன்.
பொதுவில் காதல் என்பது என்ன? அது ஒரு அன்புமயமான ஒன்று என்று மட்டும் சொல்லிவிட முடியாது பின் அம்மா அப்பா மேல், சகோதர சகோதரிகள் மேல் இருப்பதும் அன்புதானே அதைக் காதல் எனலாமா? என்றெல்லாம் கேள்விகள் எழும்’
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காமத்தின் நிமித்தமும் நேரிடும் அன்புதான் காதல், அதை எப்படி காமமில்லாத நட்பு, பாசத்திடம் பொருத்திப் பார்க்க apig.apk?
அதனால்தான் பல காதல் காமம் தீர்ந்தவுடன் அதுவும் தீர்ந்துவிடுகிறது.
காமம் வேறு காதல் வேறல்ல இரண்டு எமனும் ஒன்றுதான் என்பது சிலரின் காட்டமான வாதம் என் வரையில் அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் காதல் என்றால் அது அவள் உருவ ஈர்ப்பால் வந்ததுதானே?
பழகிப் பார்த்து அன்பு பரிமாற்றம் செய்து கொண்டு மனதைத் தான் காதலிக்க வேண்டும் என்றால் உலகில் ஊனமுற்ற, குருட்டுப் பெண்களே அதிகம் காதலிக்கப் படுவர்.ஏனென்றால் அவர்கள் மனதிற்குதான் ஊனத்தை வென்ற சக்தியும், ஏகத் தனித் தன்மைகளும் உண்டு.
ஆனால் அவர்களை இன்று எண்ணிப் பார்க்க ஒருவரும் இல்லை. அழகை பார்த்து விழத்தான் ஆசைப் படுகிறோம்.
இந்த விடுதலைதான் சற்றே தெளிந்த காமத்தைக் கடந்த மூத்த சமூகம் எதிர்க்கிறது.
காமத்திற்காக உயிரை விடாதே. அதற்காக சாதி சமய இரு மொழியின் தனித்தன்மைகளை துறந்து விடாதே நீ எதிர்பார்க்கும் காமம் நாங்கள் உனக்காக அழைத்து வரும் பெண்ணிடமும் உண்டு. அவளிடம் அதைப் பெற்று, அவளுக்கும் அதைக் கொடுத்து மர கனைச் சிதைக்காமல் மதியிழக்காமல் வாழ்ந்து செய் என்கிறது.
இது எந்த அளவு சரி_? இது எந்த அளவு சாத்யம் இது எந்த அளவு நியாயமானது? என்பதெல்லாம் விடை காணப்படாத கேள்வியாகவே இன்றளவும் இருப்பவை
இத்தொடரில் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தேடிப் பார்த்தேன் ஒரு நடுநிலையாளன் போ இறுதியில் என் கருத்தாக காதலர் பக்கம் சாய்ந்து இந்து இரு நாப்புக்கும் இடமளித்துப் பேசிச் செயல்பட்டேல் கதைப் போக்கை பொறுத்தமட்டில் அப்படிச் செய்வத சரிஎன தீர்மானித்தேன்
என் முடிவை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
வாசக உலகம் பலத்த ஆதரவு தந்தது.
‘இதயம் பேசுகிறது’ இதழும் புத்தெழுச்சியோடு வெளியிட்டு உற்சாகமூட்டியது. ஆசிரியர் முருகன் மிக வித்யாசமாக என்னை மர்மக்கதை எழுதப் பணிக்காமல் குடும்பப்பாங்காக எழுத வைத்துப் பார்த்து எனக்கு சுதந்திரம் அளித்தார். அவர் ஆசிரியர் குழுவினர் காட்டிய அன்பும் ஆதரவும் மறக்கமுடியாதது.
இதயம் பேசுகிறது இதழிற்கும் அதன் வாசக உலகத்திற்கும் இதை நூலாக்கி அளிக்கும் திருமகள் நிலையம் பதிப்பகத்திற்கும் என் நன்றிகள் என்றும் உரியது.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.6 × 12 × 18 cm |
| Author | இந்திரா சௌந்தர்ராஜன் |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 320 |
| Format | paperback |
| ISBN |




Reviews
There are no reviews yet.