கினோ (3 பாகங்கள்)

Original price was: ₹1,950.00.Current price is: ₹1,755.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: தீஷா

சினிமாவைத் திரைப்படக் கல்லூரிகளுக்கும் செல்லாமல், உதவி இயக்குநராகவும் பணிபுரியாமல் கற்றுக்கொள்கிற சாத்தியத்தை இந்தப் புத்தகம் ஏற்படுத்துகிறது. சினிமா யதார்த்த வாழ்வை ஒட்டியிருக்க வேண்டும். அறிவியல் புனைவு, சாகசத் திரைப்படங்கள் எடுத்தாலும், அதில் மானு. அவலங்களும் உணர்வு ரீதியான விசாரணைகளும் இருந்தால்தான், பார்வையாளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்த முடியும். சினிமா என்ற கலையைப் பொறுத்தமட்டில், என்ன சொல்கிறோம்? அதை எப்படிச் சொல்கிறோம்? என்பதே அடிப்படை இதை நாம் வடிவம் (Form), உள்ளடக்கம் (Content) என்ற ரீதியிலும் புரிந்துகொள்ளலாம். ஒரு கதையை எந்தத் திரைப்பட வடிவத்தில், காட்சியமைப்பில் சொல்லப்போகிறீர்கள் என்பதிலிருந்துதான் இயக்குநராக, உங்களது அடையாளமும் உருவாகிறது.
ஒரு காட்சியைப் படம்பிடிக்க, கேமராவை எந்த இடத்தில் வைக்கிறார் என்பதை வைத்தே அவர் சிறந்த இயக்குநரா? இல்லையா? என்பதைச் சொல்லிவிட முடியும். இதில் இன்னும் நுட்பமாக, கேமரா எந்தக் கோணத்தில் வைக்கப்பட்டுள்ளது. எந்த உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. கேமராவிற்கும் நடிகருக்கும் இடையேயான தூரம் எவ்வளவு. என்ன Εισοσότητα பொருத்தியிருக்கிறார்கள் என்பவற்றிலெல்லாம் இயக்குநர் மிகக் கவனமாகச் செயலாற்ற வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு கேமரா நகர்விற்கும், அசைவிற்கும், அது அமைக்கப்பட்ட விதத்திற்கும், திரையில் ஒரு அர்த்தம் உருவாகிறது. அதேபோல ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு உணர்வுநிலை இருக்கிறது. அது படம் பார்ப்பவர்களிடத்தில் சரியாகக் கடத்தப்பட வேண்டும். அந்த வகையில், கேமரா பேசுகிற மொழியைப் புரிந்துகொள்ள உங்களுக்கு ‘கினோ’ புத்தகம் உதவியாக இருக்கும்.
இதில் சரியாக 100 நவீன கேமரா நுட்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. காட்சியின் மனநிலைக்கேற்ற, காட்சியமைப்பை எப்படிக் கட்டமைப்பது, என இப்புத்தகத்தின் வாயிலாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள். திரைப்படத்தின் காட்சிமொழியைக் கற்றுக்கொள்வதற்கான துவக்கமாக, இந்தப் புத்தகம் அமையும். ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை, கதை என சினிமாவின் பிற கூறுகள் பற்றி பெரும்பாலான புத்தகங்கள் வெளிவந்திருந்தபோதும், சினிமா டைரக்ஷன் குறித்து வெளியான, மிக முக்கியமான முதல் புத்தகம் இது.
படப்பிடிப்புத் தளத்தில், உங்களுடன் கூடவே பயணிக்கக் காத்திருக்கும் ‘கினோ’. சினிமாவைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரது கைகளிலும் இருக்கவேண்டிய புத்தகம்.

Additional information

Weight 1.8 g
Dimensions 5.5 × 18 × 25 cm
Publisher

ப்யூர் சினிமா பதிப்பகம் / பேசாமொழி

Pages

1128

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கினோ (3 பாகங்கள்)”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories