கிறித்தவமும் தமிழும்
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
மயிலையார் எழுதிய முதல் நூல் கிறித்தவமும் தமிழும் (1936) ஆகும். கிறித்தவரால் தமிழ் மொழிக்கு உண்டான நன்மைகளைக் கூறும் நூல் என்பது அந்த நூலின் துணைத் தலைப்பு.
கிறித்தவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட அச்சுப் பண்பாடு மூலம் இதழியலும் புத்தக உருவாக்கமும் தமிழ்ச் சூழலில் எவ்வாறு உருப் பெறத் தொடங்கியது என்பதை விரிவாகப் பேசியுள்ளார். கல்விக் கூடங்கள் உருவாக்கம், அதற்கு தேவையான பாட நூல்கள், அந்த நூல்களை வெளியிடும் அமைப்புகள், அவை சார்ந்து புத்தக உருவாக்கம் என்பது எவ்வாறு தமிழில் அச்சுப் பண்பாடாக உருப் பெற்றது என்ற வரலாற்றின் தொடக்க கால நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
புத்தக உருவாக்கத்தின் மூலம் தமிழில் எவ்வாறு அறிவியல் கருத்துகள் உருப்பெற்றன? அவை கல்வி கூடங்களில் எவ்வாறு பயன்படுத்தப் பட்டன? அதன் மூலம் நமது கல்வித் துறையில் உருவான மாற்றங்கள் எவை எவை? என்பவற்றை விரிவாகப் பதிவு செய்துள்ளார். இவ் வகையில் அவரது முதல் நூலே அரிய தகவல்களை சான்றாதாரமாகப் பதிவு செய்யும் பண்பைக் காணமுடிகிறது.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author | மயிலை சீனி.வேங்கடசாமி |
| Publisher | தடாகம் வெளியீடு |
| Pages | 160 |
| Format | paperback |
| ISBN | 9789393361059 |



Reviews
There are no reviews yet.