குருபீடம்

Original price was: ₹180.00.Current price is: ₹162.00.

Only 49 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இந்தத் தொகுதியின் கடைசிக் கதையான “எங்கோ, யாரோ, யாருக்காகவோ’ என்ற கதை தவிர மற்றவை ஆனந்தவிகடன், கலைமகள், மித் திரன் தீபாவளி மலர்களிலும் பிற ஆனந்தவிகடன் பத்திரிகையிலும் வெளியானவை.
நானும் எனது கதைகளும் வாசகர்களுக்கு அறிமுகமானதே பத்திரிகைகளின் மூலம் தான். கிட்டத்தட்ட பதினைந்து வருஷ காலமாக இந்தப் பத்திரிகைகளுடன் எனக்கு நட்பு உண்டு. தமிழ் நாட்டிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் இலக்கிய உத்தாரணம் செய்கின்றனவா இல்லையாஎன்பது வேறு விஷயம். அவர்கள் இலக்கியம் வளர்த்தாக வேண்டும் என்று வாதிட எனக்கு அதிகாரம் இல்லை. என் கதைகளை அவர்கள் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கிறார்கள். அவர்கள் பிரசுரிப்ப தால் நான் அவர்களுக்குக்கதைதருகிறேன். நான் அவர்களின் ஊழியனோ பங்குதாரனோ அல்ல. அவர்கள் வியாபாரத்துக்காகப் பத்திரிகை நடத்து கிறார்கள். சில சமயங்களில் மிக மோசமான வியாபார உத்திகளைக்கூடக் கையாளுகிறார்கள். இதைப்பற்றி எனக்கொரு கருத்து, விமர்சனம், கண்டனம்கூட உண்டு. அதாவது அவர்களுக்கு நான் எழுதுகிறவன் என்ற முறையில் அல்ல. ஒரு சாதாரண சமூகப் பிரஜை என்கிற முறையில் உண்டு. இதெல்லாம் தெரிந்தே நான் அவர்களுக்கு எழுதுகிறேன். என்னைப்பற்றியும் எனது கருத் துக்கள் பற்றியும் தெரிந்தே அவர்கள் என் கதை களை வாங்கி வெளியிடுகிறார்கள். எனக்குச்சன்மானமும் மரியாதையும் தருகிறார்கள். எனது அவர்கள் சுதந்திரத்தில் தலையிடுவதற்கில்லை.
எனது கதைகளை அவர்கள் திருப்பித் தருவது உண்டு. எனக்கு அதில் ஆச்சரியம் எதுமில்லை. அவர்கள் அதனைப் பிரசுரிப்பதுதான் எனக்கு ஆச்சரியம். என் கதைகளில் ஆட்சேபகரமான பகுதி என்று அவர்கள் கருதுகிறவற்றைப் பிடி வாதமாக அவர்கள் தலையில் நான் கட்ட முயலு வதே இல்லை. வாசகர்கள் கண்டனம் தெரிவித்த பிறகு அவர்கள் வருத்தம் தெரிவிப்பது உண்டு. எனக்கு அதில் வருத்தமில்லை. நிலையை நான் புரிந்து கொள்ளுகிறேன். அவர்கள்
என் கதைகளைக் குறைத்தோ சிதைத்தோ வெளியிட அவர்களுக்கு உரிமையுண்டு என்பதை நானறிவேன். ஆனால் அந்த உரிமையை அவர் கள் பயன்படுத்தாத அளவுக்கு அப்படி ஓர் அவசியம் நேர்ந்தால் நானே கண்ணை மூடிக் கொண்டு வெட்டிக் குறைத்துக் கொடுப்பேன். அப்போது அவர்களே பதறுவார்கள்: ‘சார் சார் – அந்தப் பகுதியை எடுக்காதீர்கள்’ என்பார்கள். எனக்கு அதில் மகிழ்ச்சி
நான் என் கதைகளுக்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று எவரிடத்தும் கேட்டதில்லை. ஏனெனில் பேரம்பேச அவர்கள் தருவது கதைக்கு விலை அல்ல; கேட்டுப்பெற அது கூலியும் அல்ல அவர்களிடம் உரிமைப்போர் நடத்த நான் அவர் களிடம் வேலை செய்யும் கூலிக்காரனும் அல்ல: அவர்கள் எனக்கு எஜமானர்களும் அல்ல. எனக்கு ஒரு மரியாதை உண்டு மரியாதைக்கு எந்த விதத்திலேனும் எங்கேயேனும் பங்கம் நேர்கிறது என்று நான் உணர்ந்தால் அங்கேயுள்ள உறவை முறித்துக் கொள்வேன். அவ்வளவுதான் நான் செய்யக்கூடியது. புகாருக்கோ,முறையிடலுக்கோ ஆள் சேர்த்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வ தற்கோ நான் வெட்கப்படுகிறேன். எனது உரிமைகளுக்காக நான் போராட வேண்டிய அவ சியம் எனக்கோ பிறருக்கோ இல்லை. எனது உரிமைகளை எவரும் பறிக்க இயலாது; பறிக் கவும் விடமாட்டேன். என்னைப் பொறுத்தவரை எவரிடத்தும் போரிட எனக்கு நியாயம் இல்லை. அதெல்லாம் எனது நாகரிகத்துக்குப் பொருந் தாது ; அதன் விளைவுகள் இவை.
இது compromise அல்ல; அது அடிபணிவு அல்ல; இதுதான் என் சுயமரியாதை.
நான் வாழ்க்கை வசதியோடு இருந்திருந்தால், சர்க்கார் இலாகாவில் உத்தியோகத்தில் இருந் தால் – அப்போதும் எழுதுவேன்- இந்தப் பத்திரி கைகளுக்கு ஒரு போதும் நான் எழுதமாட்டேன். புனை பெயரிலும், பெண்டாட்டியின் பெயரில் ஒளிந்து கொண்டும், மேலதிகாரிகள் உத்தரவு பெற்ற தயவிலும் இந்தப் பத்திரிகைகளுக்கு எழுதுவது ஓர் இலக்கியப் பணி என்று கருத மாட்டேன். எழுதுவதற்குப் பணம் வாங்குவது அப்போது அதர்மமாகக்கூட எனக்குப்படும். ஏனெனில் எவர் கட்டளைக்கும் உட்பட்டு யாருடைய தேவைக்காகவும் என்னால் எழுத முடியாது, என் சொந்த தர்மத்துக்காகவே நான் எழுதுகிறேன். எனது எழுத்தைப் பிரசுரித்து எனக்கு மரியாதை செய்பவர்களிடம் நான் சச்சர விடுவது அநாகரிகம்.
அவர்களோடு நான் நட்புக் கொண்டிருப்பது சமுதாய- தனிமனித உறவு நிலையிலேயே.இந்த நட்பும், இந்தத் தொடர்பும் எனது சொந்தப் பொறுப்பில் ஏற்பட்டது எழுத்தாளர் டிரேட் ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப் யூனியன், எழுத்தாளர் உரிமைக்காகப் போரிடல் படிப்பட்ட நிலைமைகள் வருமா யின், நான் எழுது வதை விட்டுவிடுவேன்: அதாவது பகிரங்கமாக எழுத மாட்டேன். ஜீவனோபாயத்துக்கு டாக்ஸி ஓட்டுவேன். அந்தத் தொழிற்சங்கத்தில் சேர்ந்து அவர்களின் உரிமைக்காகப் போராடுவேன். எழுதுவது அப்படி இன்னும் ஆகவில்லை.

Additional information

Weight 0.15 g
Dimensions 0.9 × 12 × 18 cm
Author

ஜெயகாந்தன்

Publisher

மீனாட்சி புத்தக நிலையம்

Pages

192

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “குருபீடம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories