குளிர்மலை
Original price was: ₹130.00.₹124.00Current price is: ₹124.00.
Description
ஹான்ஷான் என்றால் குளிர்ந்த மலை எனப் பொருள்படும். சீனாவின் தாங் பேரரசைச் சேர்ந்த ஹான்ஷான் எனும் ஜென் துறவி, தாவோயிய மற்றும் சான் மரபையொட்டி எழுதிய கவிதைகளில் இருந்து நூறு கவிதைகள் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன. “குளிர்மலை என்பது ஒரு இடத்தின் பெயரைக் குறிப்பதற்குப் பதிலாக
மனநிலையைக் குறிக்கும் பெயராகவே தோன்றுகிறது. இப்புரிதலோடு, புத்தரை நமக்கு வெளியே தேடியலைவதை விடவும், நம் மனமெனும் இல்லத்தில் வீற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பொக்கிஷமான’ அவரை அடைய வேண்டுமென்ற மறைஞானமே இக்கவிதைகளின் அடிநாதமாக உள்ளது.சீனாவின் புகழ்பெற்ற டியாண்டாய் மலைதான் ஹான்ஷானின் குளிர்ந்தமலை .அவர் தனது கவிதைகளும் குளிர்ந்தமலையும் வேறல்ல என்கிறார். வாழ்க்கை என்பது எரியும் வீட்டிலிருந்து தப்பி குளிர்ந்தமலையை அடைந்து அதனுள் ஐக்கியமாவது. அதனை நோக்கிய பயணமே அவரது கவிதைகள். ஹான்ஷான் தனது இறுதிக்காலத்தில் டியாண்டாய்
மலையின் ஒரு பிளவினுள் சென்று மறைந்ததாகச் சொல்லப்படுகிறது.
தமிழில் ஜென்கவிதைகள் முன்பு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் திரும்பத்திரும்ப பாஷோ போன்ற ஒன்றிரண்டு பெயர்களே ஒலித்துவந்த நிலையில் ஜென்கவிதையின் மூலவர்களை
நோக்கிக் கவனத்தை கவிஞர் சசிகலாபாபு திருப்பியிருப்பது பாராட்டத்தக்கது. வெறுமனே வார்த்தைநிகர்வார்த்தை என்று மொழிபெயர்க்காமல் ஒவ்வொரு கவிதையின் பின்புலம் தேடியும் அவர் செய்திருக்கும் பிரயாணம் அவரது மொழிபெயர்ப்பில் தெரிகிறது. அந்தப் பிரயாணத்தை அவர் தந்திருக்கும் அடிக்குறிப்புகள் காட்டுகின்றன. நன்று.
– போகன் சங்கர்
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.7 × 10.6 × 18 cm |
| Author | ஆசிரியர்:ஹான்ஷான் தமிழில்: சசிகலா பாபு |
| Publisher | எதிர் வெளியீடு |
| Pages | 112 |
| Format | Paperback |
| ISBN | 9789387333802 |



Reviews
There are no reviews yet.