கொரில்லா
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
விடுதலைப் போராட்டம் அராஜகத்தன்மை கொண்டதாக, பாஸிசமாக மாறிவிடுவதை ஜனநாயக சக்திகள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இத்தகைய எச்சரிக்கை வேண்டும் என்பதை இந்தப் புனைவைப் படித்து முடிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும்.
-தெ.மதுசூதனன், இந்தியா டுடே
காலத்தை முன்பின்னாகக் குலைத்துப் போட்டு உண்மைகளை அங்கங்கே ஒளித்து வைத்து, வாசிக்கும் செயல்பாட்டை ஒரு விளையாட்டைப் போல ஆக்கியிருக்கிறது.
– ம. மதிவண்ணன், புதிய கோடாங்கி
கடந்த இருபதாண்டு ஈழத் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய நாவல். இயக்கங்கள், அரசாங்கங்கள் என்று இயந்திரகதியில் இயங்கும் ராணுவத் தளங்களுக்கு மத்தியில் தன் அடையாளங்களுக்காகப் போராடும் ஒருவனைப் பற்றிய நாவல்.
– டி.அருள்ளழிலன், ஆனந்தவிகடன்
ஈழப் போராட்டத்தை மிக மோசமாகக் கொச்சைப்படுத்திய நாவல்.
– சாருநிவேதிதா, charuonline
வாழ்வின் நிஜப் பாத்திரங்களை வைத்துக் கட்டப்பட்டிருப்பதாலேயே என்னவோ அவை வாழ்வின் பாத்திரங்களைவிட அசுர பரிமாணங்களடைந்து நிற்கின்றன. இரவல் செய்திக் கத்தரிப்புகளை வைத்து இந்த நாவலை எழுதுவது சாத்தியமே இல்லை.
– பிரம்மராஜன், அட்சரம்
பூமிப்பரப்பின் எந்த ஒரு புள்ளியிலும் நிலைகொள்ள முடியாமல் பரிதவித்து அலைய நேர்கிற மனங்கள் பற்றிய நேர்த்தியான பதிவு.
– யுவன் சந்திரசேகர், காலச்சுவடு
இது ஓர் இலக்கியப் படைப்பு மட்டுமல்ல, சமகால வலியும் வேதனையும் நிறைந்த ஒரு போராட்டச் சூழலின் பதிவும்கூட.. அந்த வகையில் கொரில்லா ஓஆவணம்.
– தளவாய்சுந்தரம், தீராநதி
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 200 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.