கொற்றவையும் நடுகற்களும்
Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
Description
பண்டையத் தமிழ்ச் சமூகம் என்னும் இந்த ஆய்வு நூல் முனைவர் பூங்குன்றன், முனைவர் கோ.சசிகலா அவர்களின் பல்வேறு தளங்களில் தமிழ்ச்சமூகம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக விளங்குகிறது.
தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் அவர்கள் பல ஆய்வு மானவர்களுக்கும், ஆய்வு நெறியாளர்களுக்கும் வழிகாட்டுதலாய் பல கருத்துரைகளை வழங்கியுள்ளார். ஆய்வு மாணவர்களும், ஆய்வறிஞர்களும் வரலாற்றை அணுக வேண்டிய புதிய ஆய்வியல் நெறி முறைகளை தன் கட்டுரைகளில் அவர் ஆழமாகப் பதித்துள்ளார். ஓப்பாய்வு மாற்றுச் சிந்தனை, தொன்யை நோக்கு, அறிவியல் நெறி ஆகியவற்றின் அடிப்படையில் அன்னாரின் ஆய்வுக் கட்டுரைகள் அமையும். இத்தகைய நோக்கும். ஆய்வுகளிள் போக்கும் இன்றையச் சூழலில் மிகவும் இன்றியமையாதது. நடுகல்; வட்டெழுத்து, வேளிர், கொங்கு மண்டலம் ஆகியவற்றில் அவரின் பணி ஒரு மைல் கல்லாக அமைகிறது. தொல்லியல் ஆய்வாளர் சசிகலா அவர்கள் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாலி பூங்குன்றன் அவர்களிடம் பயின்றவர். தொல்லியல், சங்க இலக்கியம் மற்றும் பண்டைய வரலாறு குறித்த தமது கருத்துகளை ஆய்வுத்தரவுகளைக் கொண்டு தமது படைப்புகளில் தமிழ்ச்சமூகப் பண்பாட்டின் பண்டைய நிலைப்பாடுகளை நிறுவியுள்ளார். பெரும்பாலும் களஆய்வுகளின் மூலம் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் அமையும் இவரது ஆய்வு நெறி தனித்துவமானது. கோயிற்கலைகள் சார்ந்த ஆய்வுகளில் இவரது தமிழ்ச்சமூகத்தின் நுண்கலை பற்றிய தேடல் வரலாற்றுந்தரவுகளின் பின்புலத்தை ஆய்வு செய்யத் தூண்டுபவையாக அமையும். கோ-யிற்கலை மற்றும் தமிழ் இலக்கியம் தொடர்பாக பல இளம் ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
தொல்லியலாளர்கள் பூங்குன்றன் மற்றும் சசிகலா அவர்களின் தமிழ்ப்புலம் சார்ந்த சமூக ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 148 |
| Format | paperback |
| ISBN | 9788194174424 |



Reviews
There are no reviews yet.