கோபல்ல கிராமம்
Original price was: ₹170.00.₹161.00Current price is: ₹161.00.
Description
கி.ராஜநாராயணன் ஓர் உன்னதமான கதைசொல்லி மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. எளிய விவசாயியாக இடைசெவல் என்ற கிராமத்தில் வாழ்ந்து எழுதியவர். கிராம மக்களின் பேச்சுத் தமிழை இலக்கிய மொழியாக்கியவர், கரிசல் இலக்கியம் என்ற தனி வகையை உருவாக்கிய முன்னோடி கிராமியக் கதைகள், பாடல்கள், சொலவடைகள் நாட்டுப்புற நம்பிக்கைகள் என்று தேடித் தேடிச் சேகரித்து நமது வாழ்மொழி மரபைக் காப்பாற்றியவர்.
கரிசல் அகராதி என்ற வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து போராடிய விவசாயி. சங்கீத ஞானத்தில் விற்பன்னர். சங்கீதமேதை விளாத்திகுளம் சாமிகளின் சீடர். 50க்கும் மேற்பட்ட கரிசல் வட்டார எழுத்தாளர்களை உருவாக்கியவர். இவரது கோபல்ல கிராமம் மிக முக்கியமான தமிழ் நாவல்.
எகிப்தின் நகுப் மக்பூஸ் (Naguib Mahfouz) நோபல் பரிசு பெற்றபோது தமிழ்மொழியில் அவருக்கு நிகராக கி.ரா. இருக்கிறாரே என்று தோன்றியது. அந்த ஆதங்கம் எப்போதும் இருக்கிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 13.8 × 21 cm |
| Author | கி.ராஜநாராயணன் |
| Publisher | அன்னம் வெளியீடு |
| Pages | 176 |
| Format | Paperback |
| ISBN |




Reviews
There are no reviews yet.