சித்தம்… சிவம்… சாகசம்!
Original price was: ₹325.00.₹309.00Current price is: ₹309.00.
Description
“சித்தன்… பெரிய சித்தன்… எங்கே உன் ஆற்றலை அரசர் முன் காட்டு, பார்ப்போம்…-
“அதனால் எனக்கு ஆவது ஒன்றுமில்லை. அடுத்து. எதைச் செய்தும் உங்களை நான் அடக்கத் தேவையும் இல்லை.
“இது, அதிகப் பிரசங்கம். இப்போதே கைது செய்து சிறையில் அடைக்கவா?”
முடிந்தால் செய்யுங்கள்…”
அந்தப் பதிலைத் தொடர்ந்து, வீரர்கள் அந்தச் சித்தரைக் கைது செய்ய முயன்றனர். ஆனால், சிவச் சித்தன், ‘நில்லுங்கள்’ என்று சொன்ன மாத்திரத்தில் கல்லாகச் சமைந்து நின்றுவிட்டனர். அருகிலேயே ஆலய கோபுரத்தைத் தாங்கி நிற்கும் இந்திரன் தோட்டத்து யானைகளில் ஒன்றாக ஒரு கல் யானை. அதைச் சிவச் சித்தன் பார்க்கவும், அதற்கு உயிர் வந்தது. தும்பிக்கையை விசைத்து அசைத்த அதற்கு, அந்தரத்தில் இருந்து கரும்பை வரவழைத்து நீட்டினார் சிவச் சித்தன். அதையும் அது உண்டது.
நடந்ததை எல்லாம் பார்த்து. மன்னன் அபிஷேக பாண்டியன் விக்கித்துப்போனான். இருந்தும், தனக்கு எதிரில் தெரிவது நிஜமான யானையா அல்லது பொய்த் தோற்றமா என்று அறிய விரும்பி, அதன் முன் சென்று பார்த்தபோது… அந்த யானை மன்னனின் கழுத்து முத்துமாலையைப் பறித்து அதையும் கரும்புபோல் கருதி விழுங்கிவிட்டது.
அபிஷேக பாண்டியனும் அரச கர்வத்தை விலக்கி, “அன்பரே… யார் நீவிர்? எதை உணர்த்த இந்தச் சாகசங்கள்?” என்று கேட்ட நொடியில், அந்தச் சிவச் சித்தனும் சொக்கலிங்க நாதர் சந்நிதியில் புகுந்து மறைந்து, ‘வந்தது நானே!’ என்பதை உணர்த்தினார். அப்படியே பாண்டிய மன்னனுக்குப் பிள்ளை வரமும் அளித்தார்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 304 |
| Format | paperback |
| ISBN | 9788184766004 |



Reviews
There are no reviews yet.