திருக்குறள் தெளிவுரை
Original price was: ₹400.00.₹399.00Current price is: ₹399.00.
Description
டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் 11.7.1920இல் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் பிறந்தார். தந்தையார் திரு. இராசகோபால்; தாயார் திருமதி. மீனாட்சி சுந்தரத்தம்மாள். பள்ளிப் படிப்பைப் பட்டுக்கோட்டையிலும், மேற்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் மேற்கொண்டு தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். 1972ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்கப் பெற்றவர்.
பள்ளிப் பருவத்திலேயே தன்மதிப்பியக்கத் தொடர்பும், பகுத்தறிவு நெறிப்பற்றும் கொண்டு விளங்கிய நாவலர், அவற்றைத் தம் வாழ்க்கையின் இறுதிவரை வழுவாது கடைப்பிடித்தவர்.
நாவலர் சிறந்த பேச்சாளர்; சிந்தனையாளர்; நாடறிந்த எழுத்தாளர்; அரசியல்வாதி; சீர்திருத்தச் செம்மல்; ஒழுக்கம் போற்றியவர்; புகழ் படைத்த நிர்வாகி. அறிஞர் அண்ணா அவர்களால் ‘நாவலர்’ என்றும், ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்றும் அன்புடன் அழைக்கப் பெற்றவர். இருபதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நூல்களைத் தமிழில் எழுதியவர் நாவலர் இயற்றிய திருக்குறள் தெளிவுரை எனும் இந்நூல் தமிழ்கூறு நல்லுலகில் அவர்தம் புகழினை என்றும் நிலை நிறுத்தும்.
Additional information
| Weight | 1 g |
|---|---|
| Dimensions | 4.1 × 14.6 × 21.2 cm |
| Author | டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் |
| Publisher | நன்செய் பிரசுரம் |
| Pages | 744 |
| Format | Hard Cover |



Reviews
There are no reviews yet.