நடிப்பு (கூத்துப்பட்டறையிலிருந்து சில அனுபவக் குறிப்புகள்)
Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
Description
கூத்துப்பட்டறையில் ஐந்தாண்டு காலம் மாணவராக இருந்து ந.முத்துசாமியிடம் நடிப்பு, நாடக எழுத்து ஆகியவற்றைக் கற்ற வாலறிவன், பள்ளிகள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள், நிழல்பதியம் குறும்பட இயக்கம், கார்ப்ரேட் கம்பெனிகளில் பயிற்சிப்பட்டறைகள் நடத்திக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் விஜய் ஆண்டனி (நான்), விஜய் சேதுபதி (பீட்ஷா), ஹரிஷ் கல்யாண (பொறியாளன்), விசாகன் வணங்காமுடி (வஞ்சகர் உலகம்), ஜெயன் (மத்தாப்பூ), விஷ்ணு சேதுராமன் உள்ளிட்ட நடிகர்களுக்குத் தனிப்பட்ட முறையில் திரைக்கதையில் உள்ள கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி கேமராவில் வெளிப்படுத்துவதற்கு உதவியிருக்கிறார்.
நடிப்பின் சிண்டுகளையும் சிக்கல்களையும் அனுபவங்களின் வழியாக எளிமைப்படுத்தியிருக்கும் இந்தப் புத்தகம் நடிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமான பொக்கிஷம்.
நடிப்பு என்பது என்ன? அதன் சூட்சமங்கள் என்ன? நிஜ வாழ்க்கையிலிருந்து நடிகன் எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்? நடிகர்களிடமிருந்து திரைத்துறை எதை எதிர்பார்க்கிறது? இயக்குநர்களின் சவால்களை ஒரு நடிகர் எப்படி பூர்த்தி செய்ய வேண்டும்? இப்படியான அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லும் புத்தகம் இது
– எழுத்தாளர் வா. மணிகண்டன் – நிசப்தம்
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.6 cm |
| Author | சோழன் வாலறிவன் |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Pages | 176 |
| Format | paperback |
| ISBN | 9788119541461 |



Reviews
There are no reviews yet.