நவம்பர்: நினைவுகளால் நிறைந்த காலம்
Original price was: ₹80.00.₹68.00Current price is: ₹68.00.
Description
சில நினைவுகள் காலத்துடன் மங்கிவிடும் என நினைப்போம்,
ஆனால் சில நினைவுகள் — மங்காது,
மாறாக நம்மோடு வாழ்ந்துகொண்டே இருக்கும்.
நம்மை விட்டு பிரியாமல், அந்த நொடிகளை மீண்டும் மீண்டும் நினைவூட்டும்.
அத்தகைய நினைவுகளால் நிறைந்தது தான் இந்த “நினைவுகளால் நிரம்பிய காலம்”
இது ஒரு கவிதைத் தொகுப்பு அல்ல, ஒரு உள்ளத்தின் மெளன பதிவுகள்.
அவள் இதயத்துக்குள் எழுந்த கேள்விகளும், பதிலில்லாத துயரங்களும்,
சொல்ல முடியாத சில வேதனைகளும் இதிலே உயிர் பெற்றுள்ளன.
நாம் ஒவ்வொருவரும் பெரும்பாலும் எதோவொரு நினைவுகளை சுமந்து கொண்டே தான் திரிகிறோம்.
ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த நினைவுகள் வார்த்தைகளாக மாறும் —
இவள் அந்த சிலரில் ஒருவர்.
நினைவுகள் என்பது
ஞாபகச்சுமை …!
நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா…?
உறவுகளை தொலைத்துவிட்டு
ஞாபகங்களை பாதுகாத்துக்
கொண்டிருக்கிேறாம்…!
என்று இவள் எழுதிய ஒவ்வொரு வரியும் —
ஒரு துயரத்தின் வெளிப்பாடு,
ஒரு இழப்பின் நிழல்,
ஒரு வெறுமையின் அழுகை.
இது குறிப்பிட்டு எந்த உறவையும் பற்றி அல்ல,
ஒரு பற்று முடிந்த பின் வரும் அமைதியைப் பற்றியது.
அந்த அமைதியில் சில நேரம் நிம்மதி இல்லை,
மாறாக ஒரு வேதனையின் நீண்ட ஓசை மட்டுமே உள்ளது.
“நினைவுகளால் நிரம்பிய காலம்” என்ற பெயர் சொல்லும் போல,
இந்த நூலில் ஒவ்வொரு கவிதையும் ஒரு நினைவு.
சில இனிமையில்லாத நினைவுகள்,
ஆனால் உண்மையானது.
அந்த உண்மையில்தான் இந்த எழுத்தின் உயிர் இருக்கிறது.
– அபிநயா
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 11.5 × 17 cm |
| Author | அன்பினி |
| Publisher | இறைவி வெளியீடு |
| Pages | 56 |
| Format | paperback |
| ISBN | 9789349765023 |



Reviews
There are no reviews yet.