நான்காவது சினிமா
Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.
Description
உலக சினிமா குறித்து நிறைய புத்தகங்கள் வெளியாகிகொண்டிருக்கின்றன. இணையத்தில் பலரும் உலக சினிமா குறித்த தனது எண்ணங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக திரைப்படங்களைப் பார்த்து வருபவன் என்ற முறையில் நான் விரும்பிப் பார்த்த திரைப்படங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறேன். நான்காவது சினிமா என்ற இந்தப் பத்தியை உயிர்மையில் துவங்கியதும் இதன் தொடர்ச்சியே. ஒரு ஆண்டிற்கும் மேலாக இந்தப் பத்தியை எழுதியிருக்கிறேன். இவற்றை திரைப்படங்கள் குறித்த ஆய்வுகள் என்று கூற மாட்டேன். அறிமுகங்கள் என்றே கூறுவேன். உயிர்மையில்
எழுதிய பத்தியோடு இணையத்திலும் இதழ்களிலும் உலக சினிமா குறித்து எழுதிய சில கட்டுரைகளும் இதில் சேர்க்கபட்டிருக்கின்றன. மூன்றாவது பரிமாணமில்லாத எந்தவொரு சினிமாவும் உயிரற்ற சடலத்தை போன்றது. ஒவ்வோரு சினிமா பார்வையாளனுக்கும் தான் உணர்ந்தவற்றைச் சமரசமின்றி வெளிப்படுத்த முழுமையான உரிமையுள்ளது. சினிமாவென்பது மீள் உருவாக்கத்திற்காகப் படைக்கப்பட்டது. அது காலத்திற்கு ஏற்ப மாறுபட்ட புரிதல்களுக்கு உட்பட்டது. எந்தவித எதிர்வினையுமற்ற
வினையுமற்ற திரைப்படம் செல்லாகாசு என்கிறார் இங்கர் பெர்க்மேன். இந்த எண்ணங்களே இக்கட்டுரைகளின் அடிநாதம். சமகால உலகச் சினிமா குறித்த அறிமுகமும் அப்படங்கள் உருவாக்கிய அதிர்வுகளும் கொண்ட இக்கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளியானவை.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author | எஸ்.ராமகிருஷ்ணன் |
| Publisher | தேசாந்திரி பதிப்பகம் |
| Pages | 120 |
| Format | paperback |
| ISBN | 9789387484481 |


