பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
பதினெண் சித்தர்கள் யார், யார் என்பதில், பெயர்ப் பட்டியலில், அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. சித்தர்கள் மரபில் முதலாமவர் அகத்தியரா, நந்திதேவரா? வள்ளலாருடன் அந்த மரபு முடிகிறதா, தொடர்கிறதா? இப்படி அநேக சர்ச்சைகள் நமக்கு சர்ச்சைகள் தேவை இல்லை, சித்தர்களின் சாதனைகள் தாம் முக்கியம்.
யோகமும். ஞானமும் சமய எல்லை கடந்தவை. சித்தர்களோ, யோக, ஞான எல்லைகளும் கடந்தவர்கள் சித்தர் வழி தனிவழி! ‘யாம் பெற்ற பேறு பெறுக இவ் வையகம்’ என்ற உயரிய நோக்கு அவர்களுடையது. சித்தர்களின் விடாமுயற்சியும், உழைப்பும், தன்னலமற்ற பணியும் நமக்கு இருந்தால்… நாம் எங்கோ போய் விடலாம் !
இச்சிறிய நூலில் நமது சித்தர் மரபினரையும் அவர் தம் செய்திகளையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்து கிறோம். இரண்டாயிரத்து நூறாமாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சித்தர்கள் நிஜமாகவே இருந்தார்களா என்று சந்தேகப்படும் அளவிற்கு தற்கால சமூகத்தின் நிலை உலகாயதமாக இருக்கிறது.
ஆன்மாவின் உயர்வில் பற்றுதல் கொண்டவர்களுக்கு இந்நூல் மகிழ்வு தரும்; இலட்சியத்தில் நம்பிக்கை வரும். இருபத்தோராம் நூற்றாண்டிலாவது இன்னுமொரு சித்தர் தமிழர்களுக்குக் கிடைக்க மாட்டாரா? நல்வழி காட்ட மாட்டாரா?
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 168 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.