பயத்திலிருந்து விடுதலை
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
தமிழில்: எஸ்.ராஜேஸ்வரி
இரகசியம், கபடம், குழப்பம், ஏட்டறிவு மற்றும் அதிகாரம் ஆகியவற்றிற்கு எதிரானதாக இருக்கும் ஒரு பெயர்: ஜே.கிருஷ்ணமூர்த்தி. நாம் வாழும் இக்காலகட்டத்தில் மெய்ம்மையின் தலைவராய் இவர் இருக்கிறார். இவர் தனித்து நிற்கிறார்.
ஹென்றி மில்லர்.
பயமும், ஒன்றை சார்ந்திருப்பதும், நம் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதையும், நாம் தன்னறிவு பெறுவதை அவை பற்றிய எப்படித் தடுக்கின்றன என்பதையும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஆழமான, தீர்க்கமான சிந்தனைகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது. உலகின் பல்வேறு நகரங்களில், 1954 1985-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், ஜே.கிருஷ்ணமூர்த்தி நிகழ்த்திய சொற்பொழிவுகள் மற்றும் உரையாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை, இத்தொகுப்பு கொண்டிருக்கிறது.
பயந்திருக்கும் மனம் எவ்வாறு அன்பு செலுத்த முடியும்?,
ஜடங்களாக்குவதை சார்ந்திருக்கும் மனதிற்கு ஆனந்தம் என்றால் என்ன என்று தெரியுமா? என்பது போன்ற கேள்விகள் பலவற்றிற்கு முற்றிலும் புதிய கோணத்தில் கிருஷ்ணமூர்த்தி அளிக்கும் விளக்கங்கள் அற்புதமானவை. பயம், மனதை மந்தமாக்கி, நம்மை கிருஷ்ணமூர்த்தி உணர்ச்சியற்ற அருமையாக சுட்டிக்காட்டுகிறார். கடந்த கால ஞாபகங்களால் தோற்றுவிக்கப்பட்ட கருத்துகளை ஆராய்வதின் மூலம் பயத்தின் ஆணிவேரை கண்டறிய முடியாது என்று அவர் வாதிடுகிறார். நம்மை விலங்கிடும் பயத்திலிருந்து தப்பித்து செல்ல நாம் சதா முயற்சிப்பதையும், அதற்காக நாம் கையாளும் தப்பித்தல் வழிகளையும் விவரித்து நமக்கு உணர்த்துகிறார். பயத்திலிருந்து விடுபட வேண்டும் என்று உறுதி எடுப்பதின் மூலம், நம்மை பலவீனப்படுத்தும் பயத்தின் விளைவுகளை அகற்றி விடமுடியும் என்ற கருத்தை அவர் எதிர்க்கிறார்.
பயத்தின் வேராக அமைந்திருக்கும் காரணத்தைப் புரிந்து கொள்வது, பயத்திலிருந்து மனதிற்கு விடுதலை அளிக்கும் என்று அவர் ஆலோசனை கூறுகிறார். அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல் இது.
J. Krishnamurthy, S. Rajeswari, Narmada Pathippagam
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 2 × 13 × 19 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 208 |
| Format | Hard cover |
| ISBN | 9789387303881 |



Reviews
There are no reviews yet.