பரிபாடல்

Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

Only 10 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

பண்ணோதிறம் என்று பரிபாடல் ஏடுகளில் உள்ளதாகக் குறிப்பர் உ.வே.சா. அவர்கள். பண்நேர் திறம் என்றும் பாடபேதம் உள்ளதாகவும் காட்டியுள்ளனர். உண்மை அறிய இயலாத தாகிறது. மேலும் பண் பெயர் தெரிந்தும், அப் பண்வழிப் பாடும் விதம் தெரியாத தாகவே இருக்கிறது.

பரிபாடல் நூல் பாடல்கள் பெருவாரியானவை, பாடப்படுவோரை முன்னிலைப்படுத்திப் பாடப்பட்டவையாகக் காணப்படுகின்றன. முன்னிலைப் பராவல் என்னும் இப்பாடல்கள் பரவி வழிபடும் முறையிலேயே பொருட்கூறும் சொற்கூறும் கொண்டு விளங்குகின்றன. படர்க்கை இடத்தில் குறிப்பிட்டுப் பாடப்படும் பாடல்களிலும் பாடப் பட்டோரைச் சிறப்பிக்கும் பொருட்கூறு சிறப்பாக இலங்குகின்றன. பாடல்களில் படர்க்கைக் கூறுபாட்டுச் செய்திகள் உளதாயினும் அடுத்து எனவாக ஆங்கு என, என்னும் அசைச் சொற்களை அமைத்துப் பொருள் மாற்றும் அமைப்புமுறை பேணப்படுவதைக் காண்கிறோம்.

பரிபாடலாம் இச்சங்கப் பாடல்களில் வினைத் தொகைகளின் ஆட்சி மேலோங்கி நிற்கக் காணுகிறோம். வினைத் தொகைப் பாங்கு உளதா எனப் பார்க்க வேண்டும் என்பது பரிமேல் அழகரின் செவ்விய வழிகாட்டுதலும் ஆகும். அடுத்து, உவமைக் கூறுகள் இப் பாடல்களில் விளங்குகின்றன. இறைச்சி, உள்ளுறை உவமம் மிகவாகக் காணுகின்றன. சிலேடை நயங்களும் இப் பாடலில் மிளிர்வதைக் காண முடிகிறது. யமகக் கூறுகளும் காணக் கிடைக்கின்றன. சொல்வளமும், பொருள்வளமும் பொலிந்து அமைப்பியல் அழகு எங்கணும் மின்னுகின்றன.

அந்தணர் ஆதிக்கம் தமிழகத்துப் புகுந்த காலத்து எழுந்தவை இப் பாடல்கள் எனலாம். ஆயினும் தமிழர்க்கே உரிய காதல் வழித் திருமணமே முழுமையாகப் பேசப்படுகிறது. தமிழர்தம் அகத்துறைச் செய்திகள் முழுமையாக இடம் பெறுகின்றன. அத் துறைப் பாடல்களில் வள்ளுவர் காட்டாத பரத்தமைப் பிரிவு சில பரிபாடல்களில் காணப் படுகிறது.

திருமால், செவ்வேள் வணக்கப்பாடல்களில் அத் தெய்வங்களின் உயர்வும், தத்துவப் பொருள்களும் விரிவாக இடம் பெறுகின்றன. அவ் வகைகளில் பரிமேல் அழகர் உரை மேலும் பளிச்சிடுகின்ற பாங்கை அறிய முடிகிறது. ஆயினும் மற்றைப் பாடல்களைப் பொருத்த அளவில் சில பாடல்கள் பரத்தமைப் பிரிவு அல்லாதவை கூட அப் பிரிவுக்குள் அமைத்து விடுகின்றார், பரிமேல் அழகர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை சங்க நூல்கள். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிந்தையதே பரிமேல் அழகர் உரையாகும். எனவே பரிமேல் அழகர் உரையின் வழியே மட்டும் செல்லாமல் பாட்டின் வழிச் சென்று செவ்விய பொருளை அறிய முற்படுவதே பரிபாடலைக் கொள்ளும் முறையாகும். பரிமேல் அழகர் உரையை முதல் உரை எனக் கண்டு, அவர் உரை நெருடுகின்ற இடங்களை ஆய்ந்து பார்த்தபோது கிடைத்ததே எனது உரை – செம்மை உரை.

பல புத்துரைகள் தோன்றியுள்ளன. அவையாவும் பரிமேல் அழகர் உரைக்கு உரையாகவே விளைந்தவை. ஆனால் இச் செம்மை உரை பல்லாற்றானும் சரியான வழியைக் காட்டும் உரையாகும்.

மேலும், இப் பரிபாடலை எங்ஙனம் பாடியிருக்க வேண்டும்? இவ் வினாவுக்குப் பொருந்திய விடை காணப்பட்டுள்ளது. பாடலுக்கான பொருள் எங்ஙனம் பரிந்து வருகிறது? அப் பாங்குக்குத் தகவாகப் பாடும் விதம் அமைகிறது. பொருள் பொலியுமாறு பாடப் படவேண்டியதே கருத்தில் கொள்ள வேண்டும் அன்றோ.

மேலும் மூலப்பாடல் பொருள் புலப்படுமாறு வகையுளி செய்யப் பட்டுள்ளது. அதே நேரத்தில் சந்தம் குறையாது, பத்திகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சீர் அமைப்புகள் சிதையாதவாறும் இவ் வகையுளி அமைந்துள்ளது. மேலும் பாடுவதற்கு ஏற்றபடிப் பாடலின் அமைப்புகள் அமைந்துள்ளன. இதுதான் பரிபாடல் என்பது புரியுமாறு சொல் முடிவுறும் சொற்றொடர்களைக் கண்டு, முறைப்படி அமைந்திருப்பதை அங்ஙனமாகவே காட்டப்பட்டுள்ளது. இப் பத்திகளின் சிறு கூறும் முறைப் படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. எனவே பாடும் முறையும் பாட்டின் பொருள் துலங்குமாறும் விளங்குவதைக் காணலாம்.

பாடல்களுக்கான பொழிப்புரை, முழுப்பாடலுக்குப் பின்னர், அப் பாடலில் அமைந்துள்ளவாறே அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்னதற்கு இன்னது பொருள் என கண்டு கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

பொழிப்புரைக்கு அடுத்து விளக்க உரை அமைத்து அதில் பாடலின் அப் பகுதியின் கருத்தும், உரையாசிரியன் தன் கருத்தில் பட்ட வனப்பும் காட்டப்பட்டுள்ளன. இதுகாறும் காணப்படாத பொலிவுகள், இவ் வுரையின் மூலம் வெளிப்பட்டிருப்பதையும் பொருள் முட்டிப்புகள் தீர்ந்திருப்பதையும் சரியான வழியைக் காட்டியிருப்பதையும் காணலாம்.

நாடக பாணியில் அமைந்தது; இசைப் பாணியில் அமைந்தது. இவற்றைக் கருத்தில், இறுத்திக் கொள்வதற்கு ஏற்றதாக இப் பாடல்கள் இருப்பதைக் காணலாம். உரை இதனைத் தெளிவாகக் காட்டுவதாக இருப்பதைக் காணலாம்.

மெல்லிசை தேர்ந்தார் இசைக் கருவிகளின் துணைக் கொண்டு பாடச் செய்வார் எனின், பரிபாடலின் திறம் மக்களுக்குச் சென்று நலம் பயக்கும்.

இயற்கையோடு ஒத்து இலங்கும் செயற்கையும் அவற்றொடு ஒன்றி வாழ்ந்த தமிழர் திறனும் உணர்ந்து கொள்ளலாம்.

Additional information

Weight 0.35 g
Dimensions 1.6 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

256

Format

paperback

ISBN

9789348224903

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பரிபாடல்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories