பாட்டிமார்களும் பேத்திமார்களும்
Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
Description
சில ஆண்டுகளுக்கு முன் தினமணி கதிர் பத்திரிகையில் ‘இந்த நேரத்தில் இவள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய நாவலின் தொடர்ச்சியே இந்தப் ‘பாட்டிமார்களும் பேத்திமார்களும்’ ஆகும்.
தொடர்ச்சி என்றால் அந்தக் கதை முடிந்த இடத்தில் இது தொடர்கிறது என்று அர்த்தமல்ல. அது ஒரு தலைமுறையைச் சேர்ந்த கதை. அதைத் தொடர்ந்து வருகிற அக்கதை மாந்தர் உள்ளிட்ட, மேலும் சில புதுப் பாத்திரங்கள் அடங்கிய இன்னொரு தலைமுறையின் கதை இது.
இதனை ஏன் நான் ஒரே கதையாக எழுதவில்லை என்பதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. பத்திரிகைகளில் எழுத ஒப்புக்கொள்கிறபோது உத்தேசமாக இத்தனை வாரங்கள் வரும் என்று நான் சொல்லித்தான் எழுத நேர்கிறது. அநேகமாக எல்லா நாவல்களும் எதிர்பார்க்கப்பட்ட வாரங்களுக்கு ஓரிரு இதழ்கள் அதிகமாகவே எழுத நேர்ந்து விடுவதும் உண்டு. அவ்விதம் முடிக்கிறபோது நான் எழுத எடுத்துக் கொண்ட கதையும் கதை மாந்தரும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கையில் நானே வலிய கதை முடிவுக்காக ஓரிடத்தில் நிறுத்தி இன்னொரு கதை விடுகிறேன். தொடர்கிறபோது கதைக் களனையும், மாந்தர்தம் பெயரையும் மாற்றி முன்னதற்குச் சம்பந்தமற்றது போல் தோற்றம் தருமாறு ஒரு ‘புதுக்கதை’ எழுதுவது இதனளவில் பொருத்தமற்றுத் தோன்றியதால் தனித் தனிக் கதைகளாக எழுதியும் இவற்றின் ஊடே ஒரு தொடர்பு ஏற்படுத்தலாம் என யோசித்தேன்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 12 × 18 cm |
| Author | ஜெயகாந்தன் |
| Publisher | மீனாட்சி புத்தக நிலையம் |
| Pages | 212 |
| Format | paperback |
| ISBN |




Reviews
There are no reviews yet.