பிரபஞ்சன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
Description
மனித மனங்களை லேசான மயிலிறகால் வருடும் கதைகளுக்குச் சொந்தக்காரர் பிரபஞ்சன், மனிதத்தையும், மனிதநேயத்தையும் வலியுறுத்திய அவரது எழுத்துக்கள், மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று போதித்தன. அது போதனையாக அல்ல. அறிவுறுத்தலாக அல்ல. அழகிய பட்டாம்பூச்சி நம்மைச்சுற்றி பறக்கும்போது, அதன் இறக்கைகளை பிடிக்காமல் பறப்பதை ரசிக்கிறோமே அப்படி வாழ்வை ரசிக்க வைக்கும் இக்கதைகளில் உள்ள ஆத்மானந்தாவையோ. கமலா டீச்சரையோ. குமாரசாமியையோ, மூர்த்தியையோ. சுமதியையோ நீங்கள் உங்கள் வாழ்வில் எங்கேனும் சந்தித்து இருக்கக்கூடும். உங்கள் பக்கத்து வீட்டிலேயோ. எதிர்வீட்டிலேயோ, உங்கள் வகுப்பறையிலேயோ சந்தித்து இருக்க முடியும். ஏன். அது நீங்களாககூட இருக்க முடியும்.
பிரபஞ்சனின் எல்லாக் கதைகளுமே மானுடம் பேசுபவைதான். அதில் குறிப்பிட்ட சில கதைகளை இதில் தொகுத்துள்ளேன். பிரும்மம், பாதுகை போன்ற பிரபஞ்சனின் கதைகள் பல்வேறு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இளைய தலைமுறையை நோக்கி வாசிப்பு விரிவடைய வேண்டும் என்பதற்காக இந்தத் தொகுப்பு வெளியாகிறது என்பதில் பேருவகைக் கொள்கிறேன்.
– பி.என்.எஸ்.பாண்டியன்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.9 × 14 × 21.6 cm |
| Author | பிரபஞ்சன் |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Pages | 160 |
| Format | paperback |
| ISBN | 9788194346500 |



Reviews
There are no reviews yet.