பீஃப் கவிதைகள்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
பீஃப் கவிதைகள்’ பிரம்மனின் உடம்புக்கு வெளியில் வாழும் மக்களின் பண்பாட்டு மானுடவியல் தரவுகளைத் திரட்டித் தருகிறது. ஒரு நாவலையும் ஆவணத் திரைப்பதிவையும் தன்னுள் திணித்துக்கொண்டிருக்கும் இத்தொகுப்பு. தமிழ்க்கவிதை நெடும்பரப்பில் நாவின் சுவை நரம்புகள் தெறிக்க மாட்டிறைச்சியை சூடு பறக்க வறுத்துக்கொட்டிப் பரத்துகிறது. நகுலனின் சாக்லேட் கவிதைகள் போல பச்சோந்தியின் பீஃப் கவிதைகள், ஆம், பார்ப்பனக் கவிதையியலிலிருந்து வெளியேறிய தலித் கவிதையியலின் விடுதலை அழகியலின் புதிய உச்சம். இதுவொரு கவித்துவக் கலகப் பனுவல்.
– ரமேஷ் பிரேதன்
தமிழ்க் கவிதைப் பரப்பில் ஒரு எதிர் வழக்காற்று மரபை (Counter lore tradition) பச்சோந்தியின் “பீப் கவிதைகள் “ஸ்தாபிக்கின்றன. வெங்காயத்தின் தோலை உரித்துப் பார்ப்பது போல தமிழனின் மாட்டுக்கறி உணவுப் பண்பாட்டின் பல்வேறு இழைகளைத் தமிழில் முதல் முறையாக கவிதை வடிவில் இவை எடுத்துப் பேசுகின்றன. இதுவரையிலும் தமிழ்ப் பண்பாடு என்று ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றின் விளிம்புநிலை கலாச்சாரமாக இருந்த ஒரு உள் கலாச்சாரம் (Sub culture) இக்கவிதைகளில் பெருமிதத்தோடு எடுத்துரைக்கப்படுகிறபோது அக்கவிதைக் குரல் ஒரு எதிர் – கலாச்சாரமாக (Counter – culture) விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
– இந்திரன்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 20.4 cm |
| Author | பச்சோந்தி |
| Publisher | நீலம் பதிப்பகம் |
| Pages | 128 |
| Format | paperback |
| ISBN | 9788194458203 |


