புத்துயிர்ப்பு
Original price was: ₹599.00.₹540.00Current price is: ₹540.00.
Description
புத்துயிர்ப்பு – ஒரு சாதாராண மனிதனின் குற்ற உணர்வைக்
குறித்து விவாதிக்கும் ஒரு படைப்பு. கத்யூஷா மாஸ்லவாவை ஒரு கொலைக்குற்றவாளியாகச் சந்திக்கும் நெஹ்லூதவ் அவளது குற்றத்திற்கான பொறுப்பை ஏற்க முற்படுகிறார். அப்போது அவருக்குக் கிடைக்கும் தரிசனம்தான் நாவல். டால்ஸ்டாய் ஆன்மீகத்தின் மீதல்ல ஆன்மாவின் மீது நம்பிக்கை கொண்டவராகவே எனக்குத் தோன்றுகிறார். ஆன்மா என்பதை இறையியலோடு குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. அது மானுட அறத்தின் அடிப்படை. நம் காலத்தின் மகத்தான ஆளுமைகளாக நாம் அறிந்துகொண்டிருப்பவர்கள் பலரிடமும் அதுபோன்ற ஆன்ம விசாரத்தை அடையாளம் காண முடியும்.
நெஹ்லூதவின் வழியே டால்ஸ்டாய் எழுப்பும் கேள்விகள் ஆன்மீகம், அரசியல். அதிகாரம், ஒழுக்க மதிப்பீடுகள் சார்ந்து மனிதன் உருவாக்கிக்கொண்டுள்ள பாவனைகள் சார்ந்து எழுப்பியுள்ளவையே. ஒரு கிறித்தவன் மட்டுமல்ல, இந்து இஸ்லாமியர், பௌத்தர், மார்க்சியர் என மனிதகுலத்தின் வீழ்ச்சிபற்றிய கவலைகளையுடைய யாருக்குமே எழக்கூடிய எழ வேண்டிய கேள்விகள்தாம் இவை.
– தேவிபாரதி.
Additional information
| Weight | 1 g |
|---|---|
| Dimensions | 4.8 × 14.8 × 22 cm |
| Author | லியோ டால்ஸ்டாய் தமிழில்: ரா.கிருஷ்ணய்யா |
| Publisher | நேயர் விருப்பம் |
| Pages | 744 |
| Format | Hard Cover |
| ISBN | 9789392543630 |



Reviews
There are no reviews yet.