பொன்னியின் செல்வன்
Original price was: ₹1,200.00.₹900.00Current price is: ₹900.00.
Description
தமிழின் பெரியதொரு திருப்புமுனையாளர் அமரர் கல்கி. சரித்திரக் கதைகளின் பிதாமகர். அவரது இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899-ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், எஸ். எஸ். வாசன் அழைப்பின் பேரில் ‘ஆனந்த விகடன்’ பொறுப்பாசிரியரானார். பிறகு சொந்தமாக அவரே ‘கல்கி’ வார இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் இருந்தார்.
தமிழில் வரலாற்றுப் புதினங்களின் முன்னோடியான இவரது ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற சரித்திரக் கதைகள் அக்காலத்தில் தமிழ் மக்களின் மனத்தில் இதிகாசம் போலவே இடம் பெற்றன.
பிரசித்தி பெற்ற பொன்னியின் செல்வன் புதினம் கி.பி. 1000-ம் ஆண்டு காலகட்டத்தில் அரசோச்சிய சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. சோழர்களின் பொற்கால ஆட்சியைப் பற்றி சரித்திர நூல்களில் இருந்து தெரிந்துகொண்டதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனில் இருந்தே பெரும்பாலான தமிழர்கள் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்கள்.
1954, டிசம்பர் 5-ம்தேதி, தமது 55வது வயதில் கல்கி காலமானார். கல்கியின் எழுத்துகள் 1999-ம் ஆண்டு தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனை திரும்பத் திரும்ப வாசியுங்கள். அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள்.
Additional information
| Weight | 2.4 g |
|---|---|
| Dimensions | 12.4 × 14 × 21.4 cm |
| Author | கல்கி |
| Publisher | கிழக்கு வெளியீடு |
| Pages | 2364 |
| Format | Paperback |
| ISBN | 9788184934267 |














Reviews
There are no reviews yet.