மதுரைக் கதைகள்
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
Description
மனித உறவுகளின் எழுத்தாளர் நர்சிம் இந்தத் தொகுப்பில் இருக்கும் இருபத்தைந்து கதைகளிலும் மனித உறவுகளின் நுட்பங்கள், மனிதர்களின் வெளி மற்றும் உள் முகங்களை, மனிதர் காட்ட விரும்பும் முகங்களை. மறைத்துக்கொள்ள விரும்பும் முகங்களை, மரணம் என்கிற சாஸ்வதத்தின் திண்மையை, மரணம் சாஸ்வதம் என்பது
தெரிந்தும் அதோடு முரண்டு பிடிக்கவும் மோதவும் சமன்படவும் என்பதான வாழ்வெனும் விளையாட்டை அலுக்காமல் ஆடிக்கொண்டிருக்கும் மனிதர்களைச் சற்றே நகைப்போடு எழுதுகிறார் நர்சிம்.
ஒரு தொகுப்பைப் படித்து முடித்த பிறகு, எனக்கு ஒரு நிறைவு ஏற்பட வேண்டும். நல்ல நண்பர்களை, நேர்மையான எதிரிகளைச் சந்தித்த உணர்வு மேம்பட வேண்டும். வெயில், கடுமையாக உறைக்கக் கூடாது. இரவு ரம்மியமாகி இருக்கும். அமர்ந்திருக்கும் நாற்காலி மேலும் வசதியாகி இருக்கும். நடந்து கொண்டிருந்தால், நடை சுலபமாகி இருக்கும். குடிக்கும் தேநீர் அருமையாகி இருக்க வேண்டும்.
நர்சிம் கதைகளில் இந்த உணர்வை நீங்கள் பெற முடியும்.
– பிரபஞ்சன்
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 2.2 × 12.5 × 18.5 cm |
| Author | நர்சிம் |
| Publisher | மிளிர் வெளியீடு |
| Pages | 376 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.