மத்தி
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
புதிய கவிகளில் நம்பிக்கையூட்டும் கவிகளாக மூவரை சொல்லலாம்.விஷ்ணு குமார் ,சூர்யா ,துரை ஆகியோர்.தங்கள் கவிதைகளை மங்கலாக தெரிந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்.பொது உலகப்பாடுகளில் இருந்து விலகி தங்கள் கவிதைகள் இன்னதென உணர்ந்து கொள்வதே ,வெளிப்படுத்துவதே புதிய கவிஞனை அடையாளம் காணச் செய்கிறது.ஆரம்பகால கவிஞன் புதிய மின் ஊட்டம் ஒன்றினை தன்னில் கொண்டிருக்கிறான்.இந்த அம்சம் இம்மூவருக்குமே பொதுவானது .ஆரம்ப கால கவிகள் தங்களை மிகைப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களாக
இருந்தால் ,அந்த எதிர்மறைப் பண்பிலிருந்து வெளியேறி வர நெடுங்காலம் ஆகிவிடும்.இந்த மூவரிடமும் இந்த எதிர்மறை பண்பு குறைவு.தங்களுக்கான தன்மை என்ன என்பதை கண்டுணர்ந்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஒரு புதிய கவிஞனின் ஆரம்ப நூலில் ஐந்திற்கும் மேற்பட்ட கவிதைகளை ;அவனுடைய சுயத்தை அடையாளம் காட்டுவனவாக, அவனில் இருந்து மட்டுமே உதிக்கத் தகுந்தனவாக ஏற்க இயலும் எனில் அவன் ஒரு சிறந்த கவியாகும் வாய்ப்பு கொண்டவன் என கருதலாம்.அவ்வகையில் துரையின் மத்தி கவிதைத் தொகுப்பில் சிறந்த கவிதைகள் பல உள்ளடங்கியிருக்கின்றன. ஒரு கவிக் குரல் இந்த கவிதைகளில்
அடிப்படையாக தொனிக்கிறது.
சிறந்த கவிதை நூல் – 2018 @
கவிஞர் குமரகுருபரன் நினைவு விருது
திணை – வெளி இரண்டும் நிகழ்த்தும் அனந்த கோடி விளையாட்டுகள்தான் ச.துரை கவிதைகளின் உள்ளார்ந்த பண்பாய் இருக்கின்றன. அவையே பிரதிகளில் இருப்பும் இருப்பின்மையும் வலியும் மகிழ்ச்சியும், சுயமும் மற்றமையுமென இருமைகளாகவும் மாறுகின்றன. இந்த இருமையை ஒன்றில் ஒன்றைப் பிரதியிட்டும் நிரப்பியும் கழித்தும் மொழியின் வழியே தீராத விளையாட்டை நிகழ்த்திக்காட்டுகின்றன இக்கவிதைகள். மற்றமைகளின்
வழியே தன் இருப்பை சூசகமாக வெளிப்படுத்தும் பண்பும், எடையற்ற தர்க்கங்கள் வழியே மொழிக்குள் கவிதைகளை நிகழ்த்திக்காட்டுவதுமான மாயமும், இக்கவிதைகளின் இயல்புகள். இந்த இயல்பே, இக்கவிதைகளை சமகாலத்தின் கவித்துவம் நிரம்பியதாக மாற்றுகிறது..
– இளங்கோ கிருஷ்ணன்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.6 cm |
| Author | ச. துரை |
| Publisher | சால்ட் பதிப்பகம் |
| Pages | 72 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.