மானுடம் வெல்லும்
Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.
Description
புதுச்சேரி விடுதலைப் பெற்று, பிரஞ்சுக் கொடி கீழே இறக்கப்பட்டு இந்தியத் தேசியக் கொடி மேலேறிய அந்தக் கணத்தில், அந்த நிகழ்வில் நான் பார்வையாளனாக இருந்தேன். அப்பாவுடன், அவர் வெகுகாலம் வைத்திருந்த பிரஞ்சு சைக்கிளில் ஏறிக்கொண்டு நானும் போனேன். நான் ஒன்பது வயது சிறுவன். என்னைச் சுற்றி நின்ற பல பெரியவர்கள் கண்ணீரை நான் பார்த்தேன். என் அப்பாவின் கண்களிலும், கண்ணீரின் அர்த்தம் அப்போது எனக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பிறந்த நாளின்போது அப்பா, எனக்குப் பிறந்த நாள் பரிசாக ஆனந்தரங்கரின் டயரிக்குறிப்புகள், புத்தகங்களைப் பரிசாகத் தந்தார். முதல் வாசிப்பில் அவை எனக்குப் புரியவில்லை. பிறகு, என் வாசிப்பு வளர்ந்தது.உலக இலக்கியங்கள், விடுதலை இயக்கங்கள், அவை பற்றிய வரலாற்று நூல்கள் என்று என் படிப்பு வளர்ச்சியுற்றபோது, எனக்கு என் மண்ணின் வரலாற்றின் மேல் கவனம் குவிந்தது. புதுச்சேரி வரலாறு, தமிழக வரலாறு. மராட்டிய வரலாறு, டில்லி சுல்தானிய வரலாறு. பிரான்ஸ் தேச வரலாறு என்று பல வரலாறுகள் கற்ற பிறகே, நான் எழுதத் தொடங்கினேன்.
– முன்னுரையிலிருந்து….
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.5 cm |
| Author | பிரபஞ்சன் |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Pages | 348 |
| Format | Paperback |
| ISBN | 9788194346531 |



Reviews
There are no reviews yet.