யாதுமாகி நின்றாய்
Original price was: ₹80.00.₹76.00Current price is: ₹76.00.
Description
நவீனக் கவிதைகள் பெரிதும் அகம் சார்ந்தவை; உள்முகம் நோக்கிப் பயணிப்பவை; பிடிமானத்திற்குள் அடங்காத மனமெனும் மாயக் குகைக்குள் தட்டுத் தடுமாறி முட்டிமோதி வெளிப்படுபவை; அதுவும் இந்த ஆண்மையச் சமூகத்தில் ரூபமாகவும் அரூபமாகவும் நடத்திக்காட்டப்படும் பலதரப்பட்ட ஒடுக்குமுறைக்குள் வாழ்ந்து தீர்க்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்ணின் உலகமென்பது, எந்த அளவிற்கு மனத்திலிருந்து படையெடுக்கும் எண்ணங்களால் நினைவோட்டங்களால் -கற்பனையான உரையாடல்களாலானது என்பதைச் செல்மா மீராவின் “யாதுமாகி நின்றாய்” என்ற இந்தக் கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்த கணத்தில் உணர்ந்தேன்
செல்மா பயன்படுத்தும் ‘திரட்சியான தைரியம்” “பெரும்பாதைகளின் அடைசல்கள் போல்” முதலிய சொற்றொடர்கள் மூலம் வாசிப்பின் களிப்பினை அனுபவிக்க முடிந்தது. மேலும் ஆண்மையச் சமூகத்தில் பெண்கள் அனுபவிக்கும் துக்கங்களை மட்டும் சொல்லி நகர்ந்து விடாமல் எதிர்கொண்டு வெற்றிபெறத் தூண்டும் தைரியத்தையும் செல்மாவின் கவிதைகள் ஊட்டுகின்றன.
– முனைவர். க.பஞ்சாங்கம்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 13.5 × 20.5 cm |
| Author | செல்மா மீரா |
| Publisher | அன்னம்-அகரம் வெளியீட்டகம் |
| Pages | 84 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.