யாதும் காடே யாவரும் மிருகம்
Original price was: ₹325.00.₹309.00Current price is: ₹309.00.
Description
அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கத் தவறுகிற கோணங்களை வெளிக்கொணர்வதே டி.தருமராஜின் நோக்கமாக இருக்கிறது. இக்கட்டுரைகள் சித்தரிக்கும் உலகம், நாம் வாழ்ந்து கொண்டிருப்பதுதான், ஆனால் அப்படியும் அல்ல. அதுவொரு இணை உலகாகத் தோன்றுகிறது. ஒரு சிறு சம்பவத்தை விவரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த சித்திரத்தையும் அவரால் மாற்றிவிட முடிகிறது. இப்புத்தகத்தைப் படிக்கிற யாரும் பழைய மாதிரி சிந்திக்க முடிவதில்லை என்பது உண்மை. இணையதளத்தில் தொடராக எழுதி
வந்தபோது, ஏராளமான விவாதங்களை ஏற்படுத்திய கட்டுரைகள் இவை. வழக்கம் போல திரைப்படம், நாட்டுப்புறவியல், மானுடவியல், வரலாறு, நவீனக் கோட்பாடுகள் என்று ஒரு சாகசப் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். அயோத்திதாசரும் இளையராஜாவும் உதாரணப் புருசர்களாக இடையிடையே வந்து போனாலும் அவரது சிந்தனையின் ஆதார உருவகங்களாக மாறியிருப்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.4 × 15 × 21.5 cm |
| Author | டி. தருமராஜ் |
| Publisher | சால்ட் பதிப்பகம் |
| Pages | 260 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.